ஓவியா ஆரவ் லிப் கிஸ்! வெளியே விட திட்டம்?

0

விஜய் டி.வி நடத்தி வரும் ‘உள்ளே வெளியே’ ஆட்டத்திற்குதான் எத்தனை ரெஸ்பான்ஸ்? அதிலும் தனியொரு மனுஷியாக கொடு நாக்கு விலங்குகளை(?) எதிர்த்து போராடி வரும் ஓவியாவுக்கு குவிந்து வரும் ஆதரவு வெளியே இருக்கும் சக நடிகைகளுக்கே தித்திப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் ‘ஓவியா ஆரவ்’ காதல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது நிஜ காதல்தானா? அல்லது டிஆர்பி காக செய்யப்பட்ட நாடகமா? இந்த கேள்வி ஓவியா ஆர்மிக்கே இருந்தாலும், உயிர் ஓவியாவுக்கு. உடம்பும் ஓவியாவுக்கு என்று ரத்தாபிஷேகம் நடத்தி வருகிறது இளைஞர் கூட்டம்.

எக்காரணத்தை கொண்டும் ஓவியா வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார் என்ற நம்பிக்கை சீனப் பெருஞ்சுவர் அளவுக்கு ரசிகர்களுக்கு வந்தாச்சு. அவரை அனுப்பினால், நிகழ்ச்சியே போண்டியாகிவிடும் என்ற முடிவுக்கு சேனலும் வந்தாச்சு. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் போக்கு சற்றே இறங்கினாலும் எலாஸ்டிக்கை இழுத்துப் பிடித்து ஒரே டெம்ப்பரை மேனேஜ் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக?

அங்குதான் பூனையின் தோலை உரித்து யானைக்கு அம்பாரி தைக்கும் வேலையை ஆரம்பிக்கப் போகிறார்கள். யெஸ்… ஓவியாவும் ஆரவ்வும் தன்னை மறந்து லிப் கிஸ் அடித்த அந்த காட்சி, ஏதோவொரு எபிசோடில் மின்னல் போல தோன்றச் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சி ‘கலாச்சார கேடு… கல்லும் குழியுமாச்சு ரோடு…’ என்று புலம்பி வரும் லெட்டர் பேட் கட்சிகளுக்கு இன்னும் இன்னும் குஷி. கும்மாளம்.

காட்ட வேண்டியதை காட்டுங்கய்யா சீக்கிரம்!

Leave A Reply

Your email address will not be published.