களவாணிக்கு சீச்சி… காட்டேரிக்கு ஓ.கே! ஓவியாவின் ஓரவஞ்சனை!

0

‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே என்று டிக் பண்ணுகிற அளவுக்கு டாப்புக்கு போய்விட்டார் அவர்.

களவாணிதான் ஓவியா நடித்து தமிழில் வந்த முதல் படம். இப்போது அந்தப்படத்தின் பார்ட் 2 வை எடுத்து கல்லா கட்டலாமா என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சற்குணம். விமல் சும்மாதான் இருக்கார். எப்ப கூப்பிட்டாலும் வருவார். ஆனால், ஓவியா வரணுமே? ஏராளமான எதிர்பார்ப்புடன் ஓவியாவை நாடினால், ஸாரி சார். நடிக்க விரும்பல என்று கட் பண்ணிவிட்டாராம்.

ஆனால், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் காட்டேரி என்ற படத்தில் புதுமுகத்துடன் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தை டீகே இயக்குகிறார். அறிமுகப்படுத்தியவருக்கு அம்போ… நடுவுல வந்தவருக்கு தங்க சொம்போ? என்று நடுநிலை பஞ்சாயத்தார்கள் கேள்வி எழுப்பினால், ஓவியாவின் ஆர்மி உள்ளே வந்து சவட்டி களிக்குமோ?

என்னமோ போடா மாதவா?

Leave A Reply

Your email address will not be published.