ஓவியா சிம்பு ஒருதலை ராகம்!

0

மயிலிறகுக்கே இப்போது தேவைப்படுவது ஒரே ஒரு ஃபெதர் டச்! அது உள்ளேயிருக்கும் ஆரவ்வா? வெளியே இருக்கும் சிம்புவா? (அட… இம்புட்டு முன்னேறிடுச்சா விஷயம்?) யெஸ்… சில பல முன்னேற்றங்கள். அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய ஓரிரு நாட்களுக்குள்!

ஓவியாவை காயத்ரி அண் கோ டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, தன் கருத்தை வெளியிட்டுவிட்டார் சிம்பு. “என் சப்போர்ட் ஓவியாவுக்குதான்” என்று. அவர் வெளியேறுகிற சில நாட்களுக்கு முன் அந்த ‘சப்போர்ட்’ என்கிற வார்த்தை சற்று முன்னேறி ‘காதலில்’ முடிந்ததாக தகவல். “ஓவியா சம்மதித்தால் நானே அவரை கல்யாணம் செய்து கொள்வேன்” என்று சிம்பு தன் நண்பர்களிடம் சொன்னதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. (இந்த தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டதாக சிலர் உளறவும் செய்கிறார்கள். உண்மை அதுவல்ல)

சரி… அதுவும் கடந்து போகட்டும். லேட்டஸ்ட் தகவல் என்ன? நீண்ட காலமாகவே ‘ஒருதலை ராகம்’ படத்தை ரிப்பீட் அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் டி.ஆர். காலத்தால் அழிக்க முடியாத காவியமான அந்தப்படத்தை அவரே கெடுத்து குட்டிச்சுவராக்க நினைத்தால் அதை யாரால் தடுக்க முடியும்? ஏற்கனவே எடிட் பண்ணி தயாராக இருக்கும் ‘கெட்டவன்’ படத்துடன், ஓவியா சிம்பு இணைந்து நடிக்கும் இன்னொரு எபிசோட் இணைக்கப்பட்டால், ‘ஒருதலை ராகம்’ செகன்ட் பார்ட் ரெடி என்று நினைக்கிறதாம் சிம்பு அண் கோ!

ஓவியாவுக்கு ஒரு பெரும் தொகை அட்வான்சாக கைமாறியிருப்பதாக தகவல்!

அப்படின்னா அடுத்த நயன்தாரா நம்ம ஓவியாதானோ?

Leave A Reply

Your email address will not be published.