காயத்ரி ஜுலிய மன்னிருங்க! உள்ளம் இளகிய ஓவியா!

0


தனக்கு பின்னால் இத்தனை பெரிய கூட்டம் இருக்கும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த ஓவியா சொந்த ஊருக்குப் போய்விட்டார். அங்குதான் சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி வந்திருக்கும் அத்தனை செய்திகளையும் விழுந்து விழுந்து கவனித்தாராம். இவ்வளவு அன்பா? என்று அதிர்ச்சியான அவர், எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாதல்லவா? ஒரு வீடியோவில் பேசி அதை யு ட்யூபில் வெளியிட்டுவிட்டார்.

அதில்தான் ‘காய்த்ரி ஜூலிய மன்னிருங்க. அவங்க மேல தனிப்பட்ட வன்மம் வேணாம்’ என்ற வேண்டுகோள். ‘குறையில்லாத மனுஷங்க யாருமே இல்ல. நான் கூட குறையுள்ளவள்தான்’ என்றெல்லாம் அதில் பேசியிருக்கும் ஓவியா, ஏன் முடி வெட்டிக் கொண்டேன் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். ச்சே … கிரேட்!

கேன்சர் குறித்த விழிப்புணர்வுக்காக நீங்க ஹேர் கொடுக்கணும் என்றார்களாம். அதனால் தனது முடியை வெட்டிக் கொள்ள சம்மதித்தாராம். மறுபடியும் நான் பிக் பாஸ்ல கலந்துக்கப் போறதில்ல. ஆனால் நிறைய படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். பாருங்க. நல்லாயிருந்தா பாராட்டுங்க. நல்லாயில்லேன்னா திட்டுங்க என்று கூறியிருக்கிறார் ஓவியா.

கடைசியாக ‘ட்ரூ லவ் ஜெயிக்கும். ஆரவ் மேல நான் வச்சுருக்கிற காதலும் நிறைவேறும்’ என்று கூறியிருப்பதையும் ஒரு கண்ணால் நோட் பண்ண வேண்டியிருக்கு!

ம்… அந்த தம்பி மனசுல என்ன இருக்கோ?

Leave A Reply

Your email address will not be published.