இந்த அல்டாப் இருக்க வேண்டியதுதான்! பா.ரஞ்சித்தும், கபாலி கரகோஷமும்!

0

அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன? வசன உச்சரிப்பென்ன? லுக் என்ன? லக் என்ன? என்று மில்லி மீட்டர் விடாமல் ரசிக்க வைத்தார் கபாலி ட்ரெய்லரில்.

அது வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே ஆயிரம் லட்சம் என்று கிறுகிறுக்க விட்டது இணைய உலகத்தை. லட்சங்களை கடந்த லைக்குகள், மிலியனை நெருங்கிய லுக்குகள் என்று ரஜினி ரஜினிதான் என்று ஆகிவிட்டார். இவ்வளவு புகழுக்கும் அப்படத்தின் டைரக்டர் பா.ரஞ்சித்தும் மிக முக்கியமான காரணம்தான். இருந்தாலும் சில தினங்களுக்கு முன் அவர் நடந்து கொண்ட ஒரு விஷயம் பிரஸ் மத்தியில் கொஞ்சம் புகைச்சலை கிளப்பிவிட்டிருந்தது.

ஒரு படத்தின் பத்திரிகையாளர் ஷோவுக்காக பிரசாத் லேப் தியேட்டரில் திரண்டிருந்தார்கள் பலர். அதே நேரம் வேறொரு வேலையாக அதே லேபுக்கு வந்தார் பா.ரஞ்சித். அவரிடம், சார் பிரஸ்ஷோ நடக்குது என்று கூறினார்களாம். அய்யய்யோ அவங்க என்னை பார்த்தா ஏதாவது கேள்வி கேட்டு வாய புடுங்குவாங்க. நான் கிளம்புறேன் என்று வந்த வேகத்தில் பாய்ந்து ஓடினாராம். சிறிது நேரத்தில் இதை கேள்விப்பட்ட பிரஸ், எதுக்காக இவ்வளவு அலட்டணும். விரைவில் ட்ரெய்லர் வரும். அப்புறம் பேசலாம் என்று கூறிவிட்டு கூட கிளம்பியிருக்கலாமே? ஏன் இப்படி செய்தார் என்று வருந்தினார்கள்.

ஆனால் இந்த ட்ரெய்லர் அந்த வருத்தங்களுக்கு அழுத்தமான சில லைக்குகளை பூசி எல்லா வருத்தங்களையும் மறைத்திருக்கிறது.

நல்லாயிருங்க ரஞ்சித்.

Leave A Reply

Your email address will not be published.