சினிமாவில் குடிக்கவே குடிக்காத எம்.ஜி.ஆரை இப்படியா சித்தரிப்பது? வாங்கிக்கட்டிக் கொண்ட டைரக்டர்!

0

சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்… இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று பேஸ்புக்கில் பொங்கி, ட்விட்டரில் வடை சுடுவார்கள். பகிரி பட இயக்குனர் இசக்கி கார்வண்ணன், கிட்டதட்ட இப்படியொரு ரகம்தான் போலிருக்கிறது.

‘பகிரி’ என்றால் ஒரு விஷயத்தை நாலுக்கு பேருடன் நல்ல விதமாக பகிர்ந்து கொள்வது. தனது படத்தில் நாலு அல்ல, நாற்பது கூட அல்ல, நானூறு நல்ல விஷயங்களை வைத்திருப்பார் போலிருக்கிறது. காட்சிக்கு காட்சி, கட்சிக்காரர்களின் சட்டையை உலுக்குவதே வேலை என்பது போல டயலாக் எழுதியிருக்கிறாராம். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரும், கலைஞரும் போல வேடமிட்டு இருக்கும் இரண்டு கூத்துக் கலைஞர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்குக்காக சண்டை போடுவது போல சீன் வைத்திருந்தாராம்.

இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள் சென்சார் உறுப்பினர்கள். வேறு வழியில்லாமல் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க சம்மதித்தாராம் இசக்கி கார்வண்ணன். “சென்சார் உறுப்பினர்கள் ஆளுக்கொரு கட்சிக்காரர்களாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்” என்று சீறுகிறார் அவர்.

போகட்டும்… படத்தின் கதை என்ன? …டாஸ்மாக்தான்!

தன் வாழ்நாள் லட்சியமே டாஸ்மாக்கில் வேலைக்கு சேருவதுதான் என்று வந்து சேரும் ஒரு இளைஞன் அங்கு சந்திக்கும் விஷயங்களைதான் சுட சுட கொளுத்திப் போட்டிருக்கிறாராம் இசக்கி கார்வண்ணன். குடி மடத்தை படம் முழுக்க காட்டினாலும் குடிக்காதே என்பதுதான் படத்தின் மெசெஜ்! இதில் வேடிக்கை என்னவென்றால், தன் வருங்கால கணவன் டாஸ்மாக்கில்தான் வேலைக்கு சேர வேண்டும் என்று காதலியும் விரும்புவதுதான்.

சின்னத்திரை புகழ் பிரபு ரணவீரன் ஹீரோவாகவும், ஷ்ரவியா அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.