நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு கொடுத்த சுமை!

0

எஸ்.எஸ்.சூர்யா இயக்கியிருக்கும் ‘பக்கா’ படத்தில் நிக்கி கல்ராணிக்கு பக்காவான ரோல்! அதுவும் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல. இப்போதெல்லாம் ‘நான் ரஜினி ரசிகன், அல்லது ரஜினியின் தொண்டன்’ என்று சொல்வதுதான் ட்ரென்ட். அவரும் புதுக்கட்சிக்கு பரபரவென ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மாவட்டம் முழுக்க கூட்டம் கூட்டமாக சேரும் மக்களுக்கு நடுவில், நிக்கி கல்ராணியும் இருந்தால் அதிர்ச்சியடைய தேவையில்லை.

பக்கா படத்தில் ரஜினியின் ஸ்டைலை குழைத்து அடித்திருக்கும் நிக்கி, அவரது தீவிர ரசிகையாகவும் நடித்திருக்கிறார். இந்த தகவலை இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பெருமையோடு சொன்னார் நிக்கி. அப்படியே அவர் தலையில் இன்னொரு பொறுப்பும் விழுந்தது.

கடைசி நேரம் வரைக்கும் இந்த படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வரவில்லை ஹீரோ விக்ரம் பிரபு. நிக்கிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். என்னால வர முடியாதளவுக்கு சிக்கல். ஈசிஆர் தாண்டி ஓரிடத்தில் ஷுட்டிங்கில் இருக்கேன். அதனால் என் சார்பா இதை மேடையில படிச்சுருங்க. இதுதான் அந்த பொறுப்பு. பொறுப்பாக படித்தும் விட்டார் நிக்கி கல்ராணி.

நாம் விசாரித்த வரை எந்த ஷுட்டிங்கிலேயும் இல்லை விக்ரம் பிரபு. அப்புறம் ஏன் இந்த ஆடியோ விழாவுக்கு வராமல் மக்கர் பண்ணினார் என்பதுதான் ஆயிரம் வாட்ஸ் பல்பு அவுட் ஆகிற அளவுக்கான கரண்ட் ஃபுல் கேள்வி!

Leave A Reply

Your email address will not be published.