ஐயோ சிம்பு… இப்படியா பண்ணுவீங்க? அலறிய பாண்டிராஜ்!

0

சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம் சிரிக்குது. சிரிக்கட்டும்… ஒவ்வொருத்தரு வாயிலேயும் கமர்கட் வைக்கிறேன்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு ‘ஆக்ஷன் கட்’ சொல்ல ஆரம்பித்தார் பாண்டிராஜும்.

ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் பாண்டிராஜின் நிம்மதியில் பான் பராக்கை துப்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. படமே லேட். இதில் இன்னொரு படத்தையும் இயக்க கிளம்பிய பாண்டிராஜுக்கு சிம்புவே நந்தியாக இருக்கிறாராம். அதையும் மீறி சூர்யாவின் கம்பெனிக்கு படம் பண்ணும் முனைப்பிலிருந்தார் பாண்டி. நடுவில் இது நம்ம ஆளு படத்தையும் முடிச்சுட்டா இன்னும் கொஞ்சம் நிம்மதியாக அந்த பட வேலைகளை பார்க்கலாமே என்கிற நினைப்பும் இருக்கிறதாம் அவரிடம்.

ஆனால் படத்தை முடிக்கவே விடாமல் படுத்துகிறாராம் சிம்பு. எப்படி? அண்மையில் சிம்புவை பார்க்க போயிருந்தாராம் பாண்டிராஜ். இது படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க டாப்ஸியிடம் பேசியிருந்தாராம். அவரை கமிட் பண்ண வேண்டும் என்றால் அட்வான்ஸ் கொடுக்க வேண்டுமே? சிம்புதானே இந்த படத்தின் தயாரிப்பாளர். அதனால்தான் இந்த விசிட். போனவருக்கு பயங்கர அதிர்ச்சி. இந்த வாரம் இது நம்ம ஆளு படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் நினைப்பில் விழுந்தது சம்மட்டி அடி. சிம்பு தன் ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றியிருந்தாராம். அதுவும் இரண்டு பக்கமும் டைட்டாக கட் பண்ணி.

‘நீங்க இப்படி கட் பண்ணிட்டு நின்னா, கன்ட்டினியூட்டியே இருக்காதே? இது வளர இன்னும் ஒரு மாசம் ஆகும் போலிருக்கே’ என்று பதறிப் போயிருக்கிறார் பாண்டி. ‘வளரட்டுமே… அதுக்கென்ன இப்போ? வளர்ந்த பிறகு சொல்லியனுப்புறேன்… வாங்க’ என்றாராம் சிம்பு. டாப்ஸி விவகாரத்தை அப்படியே மறந்துவிட்டு ரிட்டர்ன் ஆகிவிட்டார் பாண்டிராஜ்.

பொதுவாகவே ஒரு ஹீரோ, ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், முடி வெட்டுவதில் துவங்கி நகம் வெட்டுவது வரைக்கும் கூட அப்படத்தின் டைரக்டர் நாலெட்ஜ் இல்லாமல் செய்ய மாட்டார். இவர் சிம்புவாச்சே? செய்வார்… செய்வார்… செய்வார்…! ஏனென்றால் இவர் சிம்பு!

Leave A Reply

Your email address will not be published.