சசிகுமார் கொலைக்காக கத்தி எடுக்கும் ரஜினி! பேட்ட கதை இதுதான்!

6

சில வருடங்கள் கழித்து அதே பழைய ரஜினி என்று உருமி மேள மனசுடன் உற்சாகமாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ‘கொல காண்டுல இருக்கேன். அப்படியே ஓடிப் போயிடு’ என்கிற அந்த ஒரு டயலாக்குக்கே அடித்தொண்டை வரள விசிலடிக்கும் ரசிகன், படத்தில் இதுபோல ஐம்பது டயலாக்குகள் இருந்தால் என்னாவான்? யெஸ்… அதுதான் நடக்கப் போகிறது.

இஸ்லாமியரான சசிகுமார் குடும்பத்தின் வளர்ப்பு பிள்ளையான ரஜினி ஒரு இந்து. சசி குடும்பத்தை தன் குடும்பமாகவே கருதுகிற ரஜினிக்கு ஒரு திடீர் அதிர்ச்சி. இந்து பெண்ணை காதலிக்கிற சசிகுமாரை அந்த பெண்ணின் குடும்பம் கூலிப்படையை வைத்துக் கொல்கிறது. கடும் கோபத்திற்கு ஆளாகும் ரஜினி, ஒரு கல்லூரியில் வார்டனாக சேர்கிறார். அங்கிருந்தபடியே சசியை கொன்ற ஒவ்வொருவரையும் தேடி தேடி போட்டுத் தள்ளுகிறார். சசிக்கு த்ரிஷா ஜோடியாகவும், த்ரிஷாவின் அப்பாவாக இயக்குனர் மகேந்திரனும் நடிக்கிறார்கள்.

ரஜினியை படு இளமையாகவும் அதே பழைய உற்சாகத்தோடும் காட்ட வேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை முழுசாக பார்த்த ரஜினி, ‘மீண்டும் தயாரா இருங்க. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன்’ என்று கூறியிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜிடம்.

ரஜினியை மீட்டெடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி ரசிகர்கள் செய்யப் போகும் கைமாறு என்ன? வெறும் கைத்தட்டல்தானா, அல்லது ஏதேனும் மாநாடு நடத்தி பாராட்டுவீர்களா?

புக் பண்ணுங்கய்யா நேரு ஸ்டேடியத்தை!

ஆங் சொல்ல மறந்தாச்சு. விஜய் சேதுபதி மாணவர்களிடம் போதை மருந்து விற்பவராக நடிக்கிறாராம்.

6 Comments
 1. Mohanakrishnan says

  சூப்பர்! சூப்பர் ஸ்டார் பெரிய கிழவன், தல சின்ன கிழவனை வர்ற பொங்கலுக்கு வெச்சி செய்ய போறான். விசுவாசம் ட்ரைலர் பேட்ட ட்ரைலரை விட ரொம்ப மோசம். தல தனியா வந்துருக்கலாம்.

  1. பேட்ட அர்ஜுன் ‏ says

   68 வயசுல top heroவா இருக்க வேணா.. மொதல்ல fieldல ஒரு heroவா இருங்க..? அப்ப வந்து ரஜினிய கலாய்ச்சி பேசுங்க… நாம அப்ப உங்க ஆளா எங்க ஆளானு வாக்குவாதம் வச்சுகலாம்..? இப்ப கடைய சாத்திட்டு தகுதிக்கேத்த வேலைய பாருங்கடா..?

   1. Mohanakrishnan says

    itho paara another allakai

    1. தமிழ் பிரபாகரன் says

     அடேய் பொங்கலும், பொங்க வைக்கிறதும் எங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல ….. வரது தலைவர் ஓடி பதுங்கிரிரு பேட்ட பராக்

     (சில முண்டக்’கலப்பை’கள் பொய்யை அள்ளி விட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்).

 2. bandhu says

  disclosing the story of the movie yet to be released is really cheap. what are you trying to achieve? to spoil the experience of people who will otherwise enjoy the movie? those who do not like the hero will otherwise also not watch the movie. This perhaps is the lowest one can go!

 3. Zeus says

  ஹா ஹா…. சூப்பரா கத விட்டுருக்கிங்க…. சசிகுமார்…..திரிஷா ஜோடி… மகேந்திரன் திரிஷா அப்பா….
  முடியல… எவனோ சொன்னத நீங்க கண்டுபிடிச்ச மாதிரி ஒரு நீயூஸ் வேற.

Leave A Reply

Your email address will not be published.