சுற்றி வளைத்த விஸ்வாசம்! சூது கவ்விய பேட்ட!

1

ஒரே நாளில் மோதாவிட்டாலும், ஓரிரு நாட்கள் முன்னே பின்னே வரப்போகிறது விஸ்வாசமும் பேட்டயும். ரஜினியும் அஜீத்தும் நல்ல நண்பர்கள். ஒருபோதும் மோதிக் கொள்ள மாட்டார்கள் என்று உலகம் நம்பியிருந்த வேளையில்தான் இவர்களின் ஆலோசனையை கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் களத்தில் குதித்திருக்கின்றன இவ்விரு பட நிறுவனங்களும்.

ஒரு காலத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்த ரஜினி படங்கள், இப்போது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வருவதா… ஷாக்காக்கீதேப்பா.. என்று சினிமாவுலகம் ஜிலீர் ஆகிக்கிடக்கிறது. அது ரஜினியின் புகழுக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் அடுத்தடுத்து படத்தை இறக்குவதன் ரகசியம் வேறொன்றுமில்லை. இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் அடிதடிதான்! போகட்டும்… நாம் சொல்ல வந்த விஷயமே வேறு.

விஸ்வாசம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்புதான் பேட்ட படம் தன் பிரசவ தேதியை அறிவித்தது. அதற்கு முன்பாகவே இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்தாரோ என்னவோ? விஸ்வாசம் படத்தை வாங்கிய கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ், தமிழகம் முழுக்கவிருக்கிற சுமார் 70 சதவீத தியேட்டரை கபளிகரம் செய்துவிட்டார். டேம்ஸ் அது இது என்று தியேட்டர்காரர்களை மிரட்டாமல், உங்க தியேட்டருக்கு என்ன வாடகையோ? அதை மொத்தமா வாங்கிக்கோங்க என்று பணத்தை கொடுத்து ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.

மீதி 30 சதவீத தியேட்டரே மிச்சமுள்ள நிலையில், ரஜினியின் பேட்ட எப்படி வரும்? ரிலீஸ் தேதியை மறுபரிசீலனை செய்யலாமா என்கிற அளவுக்கு போயிருக்கிறதாம் நிலைமை!

1 Comment
  1. திராவிட ஜீவா says

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0, இந்திய சினிமாவிற்கு பவுண்டரியையும் தமிழ் சினிமாவிற்கு கண்ணுக்கு தெரியா எல்லைக்கோட்டையும் போட்டிருக்கிறது. முதல் நாளில் சென்னையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் உட்பட எந்தப் படங்கள் வந்தாலும் மிக அதிகமான திரையரங்குகளில் வந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடும். அதிலும் ரஜினி மட்டுமே விதிவிலக்கு. அதேபோல் 2..0 படமும் சாதாரண வேலைநாள் கிழமையான வியாழன் அன்று வெளியானது. முறையான முன்பதிவு தகவல்கள் தியேட்டர்களில் தரப்படாமலேயே முதல் நாள் வசூல் மிகபிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சென்னையில் முதல் நாள் வசூல் 2.76 கோடி என கணக்கிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1033 திரையரங்குகளில் 46 கோடியை தாண்டியது. அதிகாரபூர்வ தகவல் வரும்போது, முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 54 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமா வரலாற்றில் இது பல ஆண்டுகளுக்கு சாதனையாக இருக்கும். சென்னை வசூலில் இதற்கு முன் கபாலி வசூலித்த 1.89 கோடி ஒரு மைல் கல். இப்போது 2.0 வசூல் 2.76 கோடி என்பது சாதனையாக மட்டுமல்ல, உச்சகட்ட வசூல் பிரளயமாக பார்க்கப்ப‌டுகிறது. படம் மிகப் பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளது மட்டுமல்ல, படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவாக இருப்பதால் 2.0 படம் வசூலில் உலக சினிமாவின் சென்டர் பாய்ண்ட் எனப்படும் ஹாலிவுட் சினிமாவுக்கு போட்டியாக ஒரு இந்திய படம் பார்க்கப்படும் நிலையை உறுவாக்கியிருக்கிறது. இது ஒரு வசூல் பவுண்டரியை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    வசூலிலும் இந்திய சினிமாவின் எல்லைக்கோடாக 2.0 பார்க்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.