அஜீத் சிவாவை பிரிக்க சதி! பின்னணியில் ஒரு இயக்குனர்?

0

முன்பெல்லாம் கழுத்தில் கர்சீப் கட்டிய வில்லன்கள், தெருமுனை ‘பிகர்’களை மடக்க இப்படியெல்லாம் திட்டம் போடுவார்கள். சல்லி கூலிக்கு ஆள் பிடித்து, ‘என் பெயரையும் அவ பெயரையும் சேர்த்து சேர்த்து சுவத்துல எழுதுங்கப்பா’ என்பதுதான் அந்த திடு திடு திட்டமாக இருக்கும். காலம் மாறிப் போச்சு. சுவருக்கு பதில் சோஷியல் மீடியா வந்துவிட்டது. இதனால் புல் டென்ஷனுக்கு ஆளாகியிருக்கிறார் சிறுத்தை சிவா.

விவேகம் படத்திற்கு பின் சிறுத்தை சிவா ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் அந்த சோஷியல் மீடியாக்களில் தூவப்படும் செய்தி. நல்ல விஷயம்தானே… அதுக்கு ஏன் டென்ஷன்?

அங்குதான் சதி நடந்து வருகிறதாம். அஜீத்தும் சிவாவும் ஒண்ணுக்குள் ஒண்ணு என்று ஆகிவிட்டார்கள். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களை அவருடன் இணைந்து வழங்கிய சிவா, நாலாவதாகவும் அஜீத்தை விட்டு விலகுவதாக இல்லையாம். அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரது நட்பு வட்டத்திற்குள் கவுரவமான இடத்தை பிடித்துவிட்டார் சிவா. படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே சிறு ஈகோ கூட வந்ததில்லை. அவரே வாய் திறந்து நீங்க வேறொரு படத்தை இயக்கிட்டு வாங்க என்று சொன்னாலொழிய அங்கிருந்து வருவதாகவும் இல்லை என்ற முடிவுக்கு சிவா வந்து வெகு நாளாகிவிட்டதாம்.

ஆனால் அண்ணன் திண்ணையை காலி பண்ணினால்தானே நம்ம சிட்டிங் போட முடியும் என்று நினைத்த ஒரு இயக்குனர்தான், “சிறுத்தை சிவா அடுத்து ரஜினி சாருக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணிட்டார். சிவகார்த்திகேயன் கால்ஷீட் வாங்கி கைநிறைய வச்சுருக்கார்” என்று கதை கிளப்பி வருகிறாராம்.

விவேகம் முடியட்டும். வச்சுக்குறேன் அவருக்கு என்று நாலு பேருக்கு கேட்கும்படியே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறாராம் சிவா.

சினிமாவுக்குள் ஸ்கிரீன் பிளே பண்ணுறாங்களோ இல்லையோ? இங்க ரொம்ப நல்லா பண்றாங்கப்பா!

Leave A Reply

Your email address will not be published.