அரவிந்த்சாமியை பார்த்தாவது மற்றவங்க திருந்துங்க!

0

தயாரிப்பாளரின் ரத்தக் கண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்க சொன்னால், சப்புக் கொட்டிக்கொண்டே குடிக்கும் ஜீவன்களில் முக்கியமான ஜீவன், அப்படத்தில் நடிக்கும் ஹீரோதான். சின்ன ஹீரோக்களுக்கு வற்றிப்போன ரொட்டி கூட கிடைக்காது. அதுவே பெரிய ஹீரோக்கள் என்றால், தாகம் தீர்ப்பதென்றால் கூட நதி ஓட வேண்டும். இந்த ஜீவாதார மேடு பள்ளங்களை ஆராய்ந்தால் தித்திப்பும் கசப்புமாக திகட்ட திகட்ட நியூஸ் கொட்டும்.

நாம் சொல்ல வருவது முக்கியமான விஷயம். சம்பளத்தை ஆரம்பத்திலேயே மொத்தமாக கொடுங்க. அப்பதான் இமிடியெட் கால்ஷீட் என்று சொல்லி சொல்லியே படம் எடுக்கிற பணத்தையும் சேர்த்து அறுவடை செய்யும் ஹீரோக்கள், அந்த படம் முடிந்த பின்பு தயாரிப்பாளர் ரிலீசுக்கு படும் பாட்டை துளி கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தியில் அப்படியில்லை. ஒரு சின்ன அட்வான்ஸ். படம் முடிந்து வியாபாரம் ஆன பின்தான் மீதி சம்பளம். அது யாராக இருந்தாலும்…

அப்படியொரு ஸ்டைலுக்கு வந்திருக்கிறார் அரவிந்த்சாமி. முன்னணி ஹீரோக்களுக்கு சற்றும் சளைக்காமல் சம்பளம் நிர்ணயிக்கும் அரவிந்த்சாமி, அந்த பணத்தை முதல்லயேகொடுய்யா… என்று பிடுங்கி எடுப்பதில்லை. ஒரு ரூபாய் அட்வான்ஸ். (நெசமாவே ஒரு சிங்கிள் ரூப்பிதான்ங்க) மிச்சத்தை வியாபாரம் செஞ்ச பின் கொடுங்க என்று கூறிவிடுகிறார். இதனால் ஹீரோவுக்கு ஆரம்பத்திலேயே கொட்டி அழும் பணத்தை வைத்துக் கொண்டு படத்தையே முடித்துவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நேரில் மட்டுமல்ல… மனசாலும் அழகனாக விளங்கும் அரவிந்த்சாமியின் ஸ்டைலை பிற ஹீரோக்களுக்கு வற்புறுத்தியாவது கற்றுக் கொடுக்குமா தமிழ்சினிமா? இல்லேன்னா பொழைக்கறது கஷ்டம்ப்பா….

Leave A Reply

Your email address will not be published.