நடிப்புலகத்திற்கு வந்த பா.ம.க ராமதாசின் பேரன்!

0

சினிமாவை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தமிழர்கள் கெட்டு குட்டிச்சுவராவதே சினிமாவால்தான் என்பது அவரது கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி, அல்லது சுமார் ஸ்டார் சுப்புணியாக இருந்தாலும் சரி. ஓட்டணும் என்று முடிவெடுத்துவிட்டால், வட மாவட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களின் போஸ்டர்களை கூட விட்டு வைக்க மாட்டார்கள்.

அதனாலென்ன? கதவை சாத்தி பூட்டு போட்டாலும், கலை ஆசை ஜன்னல் வழியாக உள்ளே வரும் என்பதற்கு ஆகப்பெரிய உதாரணமே இதுதான். ஆமாங்க ஆமாம்…. அவரது அன்பு பேரனும் மருத்துவர் சகோதரி மகனுமான டாக்டர் குணாநிதி நடிக்க வந்திருக்கிறார். இன்றிருக்கும் முன்னணி ஸ்டார்கள் அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளும் அழகுடன் வெளியாகியிருக்கிறது அவரது புகைப்படம். ஆனால் அவர்தான் மருத்துவர் ராமதாசின் பேரன் என்கிற பந்தவெல்லாம் இல்லாமல்.

பையன் ஸ்மார்ட்டா இருக்காரே… பின்புலம் என்ன என்று விசாரிக்கும் பலருக்கும் அப்புறம்தான் தெரிய வருகிறது அந்த பாரம்பரிய பின்னணி. சரி… எதில் நடிக்கிறார் குணாநிதி? ஜெயராவ் இயக்கத்தில் ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கும் ‘ரோமியோ ஜுலியட்’ நாடகத்தில் ரோமியோவாக நடிக்கிறார் குணாநிதி. இவருடன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் தங்கர்பச்சானின் மகன்.

இந்த ரோமியோவுக்கு ஜுலியட்டாக நடிக்கும் ஆர். நந்தினியும் பிரபல தொலைக்காட்சி நிறுவனர் ஒருவரது மகள் என்கிறார்கள். குணாநிதியின் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரை சினிமாவில் நடிக்க அழைக்காமலா இருப்பார்கள்?. அப்போது அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது மிலியன் டாலர் கேள்வியாக இருக்கும்.

நாடகத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தைவிட அரசியல் விவிஐபிகள் கூட்டம் அதிகம் வரும் போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.