விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்! அட இந்த நியாயத்தை எங்க போய் சொல்ல?

0

இவிங்ய்ங்க நியாயத்தை எந்த மண் சட்டியில் போட்டுக் கிண்டுவது என்பதுதான் புரியவில்லை.

‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் மாடு பிடி வீரராக வருகிறார். இவரை துளி கூட விரும்பாத தன்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் சொந்தபந்தங்கள். இந்த கட்டாய கல்யாணம் தம்பதிகளுக்கு இடையே ஏற்படுத்தும் சலசலப்புகளும், தன்யா மீது விஜய் சேதுபதி கொண்டிருக்கும் மிதமிஞ்சிய காதலும்தான் படத்தின் கதை. கடைசியில் அவர் சொந்த மச்சானின் நல்ல மனசை அறிந்து முந்தானையை முழு மனசோடு விரிப்பார் என்பதுதான் முடிவாக இருக்க முடியும்.

போகட்டும்… பிரச்சனை அதுவல்ல. “அதெப்படி கருப்பன் என்ற பெயரை இந்தப்படத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் வைக்கப் போச்சு?” என்று குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டது ஒரு கோஷ்டி. “கருப்பன் என்பது ஜல்லிக்கட்டு காளை ரகமாம். விஜய் சேதுபதி படத்திற்கு ‘கருப்பன்’ என்று பெயர் வைத்ததால், எங்கள் காளை இனத்துக்கே அவமானமாகிவிட்டது” என்று புகார் கொடுத்திருக்கிறார் ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் காத்தான். இந்த பெயரை படத்திற்கு வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்பதுதான் அவரது ஸ்டேட்மென்ட்.

நல்லவேளை… எங்கள் காளை இனத்துக்கே அவமானமாகிவிட்டது என்று சொன்னவர், நாலு காளை மாடு கோவிச்சுக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு போயிருச்சு. ஒரு ஏழெட்டு காளைகள் தூக்கு மாட்டி தொங்கிருச்சு. விஷம் குடித்த நிலையில் நாலு மாடுகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் என்று சொல்லாமல் விட்டாரே…

நாட்ல பாதி பேருக்கு என்னமோ ஆகிருச்சு. அது மட்டும் ரொம்ப நல்லா புரியுது.

Leave A Reply

Your email address will not be published.