ஒரு பய கூட எட்டிப்பார்க்கல! பரிதாபத்தில் பவர் சீனி!

0

நகைச்சுவைக்கும் பவர் சீனிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் சந்தானம் புண்ணியத்தில் நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகிவிட்டார் அவர். “ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கேன். கதையும் சொல்ல வேணாம். ஒரு புண்ணாக்கும் சொல்ல வேணாம். லட்சத்துக்கு மேல அட்வான்ஸ் கொடுக்கிறீங்களா? உடனே வாங்க…” என்று சும்மாவே வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பற்களால் அழைப்பது பவர்ஸ்டார் சீனிவாசனின் வழக்கம். எவ்வளவு பாடாவதி டைரக்டராக இருந்தால், இவரையும் காமெடியன் லிஸ்ட்டில் வைத்து கதை யோசித்திருப்பார் ? எப்படியோ அட்வான்ஸ்கள் கைமாறி… அப்படி இப்படி என்று நடித்துக் கொண்டிருந்தவரின் வாழ்வில் நங்கூரம் விழுந்து விட்டது.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போய்விட்டார் பவர். அவர் கம்பி எண்ணப் போய் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் வெளியே வரக்காணோம். இவர் வெளியில் இருக்கும் போது தினந்தோறும் போன் பண்ணி அன்பு செலுத்தி நீராகாரம் அருந்தி வந்தவர்கள் ஒரு மரியாதைக்குக் கூட அவரை சிறையில் சென்று பார்க்கவில்லையாம்.

“நான் உள்ள வந்து இத்தனை நாளாச்சு. ஒரு பய வந்து பார்க்கலையே? இதுதான்டா சினிமாக்காரன் நட்பு” என்று மனம் குமைந்து புலம்புகிற பவர், ஜாமீன் கிடைத்து வெளியே வரும் சிலரிடம் தன் கூட்டாளிகளுக்கு சேதி சொல்லி அனுப்புகிறாராம்.

அப்பவும் பவருக்கு ஆறுதல் தருகிற மாதிரி ஒருவரும் சிறை பக்கம் செல்வதில்லை என்பதுதான் ஷாக்!

சும்மாவா…. டெல்லி வரைக்கும் போய் திகார்ல மனு போட்டு பார்க்கணுமே, அந்த அலுப்புதான் பலருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.