தமிழ் பட தயாரிப்புக்கு குட்பை! பிரபுதேவா முடிவின் பின்னணி?

0

தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா, வெறும் டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்ல, இயக்குனராகவும் இந்தியாவை கலக்கியதை தமிழ்சினிமா சற்று பெருமையோடு ரசித்தது. இங்கிருந்து போய், இந்தியில் கடை விரிப்பதெல்லாம் அவ்வளவு சுலபம் அல்ல. அந்தப் பரீட்சையில் அள்ளி அள்ளி மார்க்குகளை குவித்த பிரபுதேவா, பிறந்த இடத்திற்கு திரும்பி வந்ததும் ஒரு வகையில் நல்லதுதான்.

ஒரு கல்வித் தந்தையுடன் இணைந்து சில படங்களை தயாரித்தார் மாஸ்டர். இதனால் பல தொழிலாளர் குடும்பமும் பிழைத்தது. ஆனால், வண்டியை சரியாக ஓட்ட வேண்டும் அல்லவா? பல்லு போன ஆட்களை வைத்து பக்கோடா கடிக்க வைத்தார். விளைவு? தயாரிப்பு பணியில் பல கோடி நஷ்டம். சமீபத்தில் பிரபுதேவா தயாரித்த ‘போகன்’, ஏகப்பட்ட கோடிகளை இழந்து பிரபுதேவாவின் நம்பிக்கையில் இடியை வாரிப் போட்டது.

இவ்வளவு நஷ்டத்தை எதிர்பார்க்காத கல்வித்தந்தை, தன் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகிக் கொண்டாராம். இதையடுத்து, ‘தஞ்சாவூர் பெரிய கோவில் தூணே சின்னதா இளைச்சிடுச்சு. நாமெல்லாம் எம்மாத்திரம்?’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தேவா மாஸ்டர். அடுத்தடுத்து தயாரிப்பதாக இருந்த படங்களை அப்படியே ‘டிராப்’ செய்துவிட்டார்.

திடீரென கழற்றிவிடப்பட்ட இயக்குனர்கள், ‘இந்த படுபாவி மட்டும் படத்தை நல்லா பண்ணியிருந்தா நம்ம பொழப்பு தப்பிச்சுருக்குமே?’ என்று போகன் இயக்குனரை ‘போற்றி புகழ்ந்து(?) கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.