ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தருவீங்களா? கேள்வி கேட்ட நிருபரை அடிக்கப் பாய்ந்த பிரகாஷ்ராஜ்?

0

மாணவர் எழுச்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவையில்லை. ஆனால் பொங்கல் கொதிக்கிற நேரத்தில், உள்ளே விழுந்த பல்லி முட்டை மாதிரி, தானும் வெந்து போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டம் இங்கு இப்போது… இந்த நேரத்திலும் இருப்பதுதான் ஆச்சர்யம். வேதனை! ஒன்றுபட்ட இளைஞர்கள் இனி மிக முக்கியமான பிரச்சனைக்கெல்லாம் கூடுவார்கள். கோஷமிடுவார்கள் என்பதுதானே இந்த நேரத்தில் பார்க்க வேண்டிய நல்ல விஷயம்?

தானும் அப்படியொரு பல்லி முட்டையாக பொங்கல் பானையில் விழுந்திருக்கிறார் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். நாடு…பிரச்சனை… போராட்டம் என்று எது பற்றி கேட்டாலும் தன் நுனி மூக்கின் மீது பொக்லைனை பிக்ஸ் பண்ணிய மாதிரி கோபப்படுவது அவரது வாடிக்கை. நேற்று திருப்பதி வந்த பிரகாஷ்ராஜிடம், ஒரு தொலைக்காட்சி நிருபர் மைக்கை நீட்டி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவதை எப்படி பார்க்கிறீங்க என்று கேட்டார்.

அவ்வளவுதான்… பாய்ந்தடித்துக் கொண்டு அவரை திட்டி தீர்க்க ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். அதற்கப்புறம்தான் ஐயய்யோ… அவ்வளவும் ரெக்கார்டு ஆவுதே என்று நினைத்திருப்பார் போலும். இன்னும் அருகில் போய் அந்த கேமிராவை பறித்து உள்ளேயிருந்த பதிவை அழிக்க முயற்சித்திருக்கிறார்.

வாழ்த்துறேன். அல்லது எதிர்க்கிறேன். இப்படி ரெண்டே வரியில் முடிய வேண்டிய பிரச்சனையை, இரண்டரை மணி நேர ஆக்ஷன் படமாக்கிட்டாரே?

Leave A Reply

Your email address will not be published.