மடோனாவை லெப்ட் ரைட் வாங்கிய பிரகாஷ்ராஜ்! கணிப்பு பொய்யாப் போச்சே?

0

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஒருவழியாக முடிந்து வெற்றி பெற்றவர்கள் பதவிக்கு வந்தாச்சு! ஒருநாளைக்கு நாலு மணி நேரம் மட்டும்தான் உறக்கம். மற்ற நேரமெல்லாம் சங்கப்பணிதான் என்று எல்லாரையும் உசுப்பிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது விஷால் தலைமையிலான புது டீம். இந்த மாப்பிள்ளை ஷோக்கு, பதவி அலுக்குற வரைக்கும் இருக்கும் என்று மற்றவர்கள் நக்கலடித்தாலும், தற்போதைய சுறுசுறுவுக்கு தனி பாராட்டுகள்.

தேர்தல் நேரத்தில், “இவங்கள்லாம் நடிகர்களா இருக்காங்களே? நாளைக்கு ஒரு பிரச்சனை வந்தால் நடிகர் பக்கம் இருப்பாங்களா? தயாரிப்பாளர் பக்கம் இருப்பாங்களா?” என்று ஒரு சந்தேகத்தை கிளப்பி ஓட்டு வேட்டையாடிய எதிர்கோஷ்டி, இந்நேரம் வாயடைத்துப் போயிருக்கும். ஏன்?

பா.பாண்டி படத்தின் பிரமோஷனுக்கு வராமல் டிமிக்கிக் கொடுத்து வந்த அந்தப்படத்தின் ஹீரோயின் மடோனா, பட நிறுவனத்திலிருந்து யார் போன் அடித்தாலும் மதிக்காமலிருந்தார். இப்படி பண்றீங்களே, நியாயமா? என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினால், மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்று பதிலனுப்பி நோகடித்தார். (இந்த செய்தியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம். http://newtamilcinema.in/mind-your-language-modona-angry/ )

ஆனால் வுண்டர்பார் நிறுவனத்திலிருந்து இப்படியொரு வாய் மொழி புகார் வந்த அடுத்த நிமிஷம், மடோனாவை போனில் பிடித்தாராம் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ். “என்னம்மா புரமோஷனுக்கு வர மாட்டேங்கிறீயாம்ல” என்று ஆரம்பித்து, லெப்ட் ரைட் விட்டாராம். எதிர்முனை கதி கலங்கிப் போக, “என்ன பண்ணுவியோ தெரியாது. நாளைக்கு நீ சென்னையில் இருக்கணும். பட புரமோஷன்களுக்கு எப்பல்லாம் கூப்பிடுறாங்களோ, அப்பல்லாம் வரணும். இல்லேன்னா தமிழ்ல புதுப்படம் கிடைக்கறது அவ்வளவு சுலபம் இல்ல” என்று எச்சரிக்க… ஃபுல் சரணாகதி அடைந்தாராம் மடோனா.

கறக்கறவன் கறந்தா காளை மாடும் பால் கறக்கும்!

Leave A Reply

Your email address will not be published.