கவுதம் கார்த்திக் படத்திற்கு இப்படியெல்லாமா நடக்கணும்?

0

ஒரு சில ஹீரோக்களின் ஆரம்பகால அமர்க்களங்களை மீண்டும் நினைத்தால், ‘அட… இந்த துண்டு பேட்டரியா ஆயிரம் வாட்ஸ் ஜெனரேட்டர் மாதிரி அலட்டுச்சு?’ என்ற எண்ணம்தான் வரும். அப்படியொரு துண்டு பேட்டரிதான் நம்ம கவுதம் கார்த்திக்! கடல் படத்தில் அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் அந்த அரை வினாடி டீசர் மறுபடியும் கிடைத்தால் போட்டுப் பாருங்களேன். அவ்வளவு கோபம் வரும். “முகத்தை முழுசா பார்க்கறதுக்குள்ள எதுக்குய்யா ஷட்டரை மூடுனே?” என்பது போலவே இருக்கும். அப்படி பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அவரை அறிமுகப்படுத்திய நேரமோ என்னவோ? இன்று வரை அப்படிதான் இருக்கிறது கவுதம் கார்த்தியின் மார்க்கெட்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் ஒரு படத்தின் நிலைமையை கேட்டால் பரிதாபம்தான் மிஞ்சும். இந்த படத்திலும் தனக்கு மிகவும் பிடித்த ப்ரியா ஆனந்தையே ஹீரோயினாக்கியிருந்தார் கவுதம். படப்பிடிப்புக்கு வெளியூருக்கு போயிருந்தார்கள். அங்குதான் பட்ஜெட்டுக்காக ஒதுக்கப்பட்ட அத்தனை பைசாவும் காலியான விஷயமே தெரிய வந்ததாம் ஹீரோவுக்கு. அத்தனை கோடி பட்ஜெட், இத்தனை கோடி பட்ஜெட் என்று ஆசை காட்டிய படத்தின் இயக்குனர், சில பல லட்சங்களை புரட்டிதான் இந்த படத்தையே ஆரம்பித்திருந்தாராம். அதுவும் சில நாட்களில் காலி. மொத்த யூனிட்டும் வெளியூரில் சிக்கிக் கொண்டது.

படத்தின் நாயகன் மற்றும் நாயகியை பில்லை செட்டில் பண்ணிட்டு ரூமை விட்டு கிளம்ப சொல்லுய்யா என்று கூறிவிட்டார்களாம் ஓட்டலில். இப்படியொரு நிலைமைக்கு தன்னை தள்ளிய டைரக்டர் கம் ஆஃப் லைன் தயாரிப்பாளரை தேடினால், ஆள் ஸ்பாட்டிலேயே இல்லை. அப்புறம் ப்ரியா ஆனந்த் தனக்கும், தன் நட்பு வட்டத்திற்குள் மெர்ஜ் ஆகிக் கிடக்கும் கவுதம் கார்த்திக்குக்கும், இன்றும் சிலருக்கும் மட்டும் பில் செட்டில் பண்ணியிருக்கிறார். எப்படியோ ஊர் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

முத்துன்னு நெனைச்சு போனா, இப்படி வெத்தா இருக்கே?

Leave A Reply

Your email address will not be published.