இதுதான் புலி படத்தின் கதை! எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்!

0

ஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவிக்கிறார்கள் விஜய்யின் லட்சோப லட்சம் ரசிகர்கள். தேடி திரிந்து அலசி ஆராய்ந்து கண்டுபிடித்தால், அட… இதுவும் டைம் மிஷின் கதைதான். (கோடம்பாக்கத்திலிருந்து பேய் மற்றும் ஆவிகளை விரட்டிய டைம் மிஷினே… நீ வாழ்க. ஏனென்றால் சூர்யாவின் 24 படமும் டைம் மிஷின் கதைதான்)

பொதுவாகவே சிம்புதேவன் படங்களின் கதை பேன்ட்டஸி சம்பந்தப்பட்டதாக இருக்கும். கற்பனைக்கும் எட்டாத கற்பனைதான் அவரது முந்தைய படங்கள். இப்போதும் புலி படத்தில் அப்படியொரு முயற்சியை செய்திருக்கிறாராம் அவர். 500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கிறது கதை. பேரரசியாக விளங்குகிறார் ஸ்ரீதேவி. அதே அமைச்சரவையில் யாருக்கும் அடங்காத படைத்தளபதி நம்ம சுதீப். ஒரு கட்டத்தில் நாட்டையே அபகரிக்க திட்டம் போடுகிறான் படைத்தளபதி. அதை நைசாக ஒற்றர்கள் மூலம் அறிகிற அரசி ஸ்ரீதேவி, அரண்மனை ஆலோசகரைஅழைத்து மதி நுட்பத்தால் அவனை அடக்கும் வழி கேட்கிறார். அவரும் தனது மந்திர தந்திர ஆலோசனைகளுக்கு பிறகு ஒரு ஐடியா சொல்கிறார்.

‘அவனை அடக்குகிற சக்தி நம் ஒருவருக்கும் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. டைம் மிஷினில் ஏறி, 500 வருடங்கள் முன்னோக்கி சென்று ஒரு வீரனை அழைத்து வந்தால் மட்டுமே இவனை அடக்க முடியும்’ என்கிறார். கால யந்திரத்தில் ஏறி 2015 க்கு வருகிறார்கள். இங்கே துள்ளலும் துடிப்புமாக நம்ம விஜய். அவரை நைசாக பேசி 500 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்கள். போன இடத்தில் அரசி ஸ்ரீதேவிக்காக சுதீப்போடு பைட் பண்ணுகிறார் விஜய். அதற்கப்புறம் என்னாகும் என்பதைதான் குழந்தை கூட யூகித்துவிடுமே?

இந்த கதை நன்றாகதானே இருக்கிறது. அதையும் சிம்புதேவன் எடுத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்தானே?

Leave A Reply

Your email address will not be published.