என் ஓட்டு விஷால் அணிக்குதான்! ராக்கெட் ஸ்டார் ராஜகுமாரன் திடுக்!

0

கடுகு வெடிச்சா, மதகு கூட உடையும்டா… என்கிற வலுவான கதைதான் கடுகு திரைப்படம்! அநீதியை தட்டிக் கேட்க, ஆள் அம்பு படை பலம் வேண்டாம். ஒரு நம்பிக்கை இருந்தா போதும். தூளோ தூள் என்பதுதான் ராஜகுமாரனின் முஷ்டி பலத்தை நம்பிய கடுகு படத்தின் க்ளைமாக்ஸ்! படம் முழுக்க ராஜகுமாரன் பேசுகிற அந்த டயலாக் மாடுலேஷன், இன்னும் அஞ்சாறு வருஷத்திற்கு காமெடி சேனல்களின் கட்டாய காட்சியாக இருக்கும்.

அதுவும் சோஷியல் மீடியா “வா மாப்ளே” என்று தோளில் கை போட்டுக் கொண்டால், சுமார் மூஞ்சு குமார்கள் கூட, ஷோக்கான இடத்தை பிடித்துவிடலாம். அந்த வகையில் ராஜகுமாரனுக்கு இன்னும் நிறைய படங்களும் கைதட்டல்களும் கிடைக்கக்கூடும். இந்த நேரத்தில்தான் மிக மிக சென்சிடிவான விஷயத்தை அசால்ட்டாக டீல் பண்ணி, “நான் எப்பவும் ஓப்பன் டாக்” தான் என்று நிரூபித்தார் ‘ராக்கெட் ஸ்டார்’ ராஜகுமாரன்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் அவரது நேர்காணல் ஒளிபரப்பானது. ராஜா திருவேங்கடத்தின் படு கேஷவலான பதில்களுக்கு அதை விட படு கேஷுவலாக பதிலளித்துக் கொண்டிருந்தார் ராக்கெட் ஸ்டார். இந்தப்படத்தில் ஹீரோவா நடிச்சுருக்கேன். அடுத்த படம் கிடைக்க இன்னும் எத்தனை வருஷமோ? வந்தா சந்தோஷம். வரலேன்னா ஊர்ல விவசாயம் இருக்கு. அதுவரைக்கும் அதை பார்த்துட்டு இருப்பேன் என்றார் ராஜகுமாரன்.

பேச்சு மெல்ல தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பற்றி வந்தது. உங்க ஓட்டு யாருக்கு? என்று தொகுப்பாளர் கேட்க, தயக்கமே இல்லாமல் பதிலளித்தார் ராஜகுமாரன். அதிலென்ன டவுட்? விஷாலுக்குதான். பல வருஷமா அங்க பதவியில் இருந்தவங்க என்ன செஞ்சாங்க? புதுசா ஒருவர் வரட்டுமே? என்றார் தில்லாக!

கடுகு வெடிச்சுருச்சுடோய்…

Leave A Reply

Your email address will not be published.