எனக்கு பிடிக்காத சொல் வேலை நிறுத்தம்! ரஜினி ஓப்பன் சமரசம்!

1

பெப்ஸி – தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள தள்ளுமுள்ளுவை அடுத்து, தமிழ்சினிமாவுலகம் ஸ்டிரைக் என்கிற மாபெரும் முட்டு கட்டையை சந்தித்து வருகிறது. நேற்று சுமார் 40 படங்களின் ஷுட்டிங் ரத்தாகிவிட்டது. ஒரே நாளில் முடிந்துவிடக் கூடிய விஷயம் இல்லை இது. இரு தரப்பும் கூடி பேசினாலொழிய ஒரு நிரந்தர தீர்வுக்கு வழியும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனை சந்தித்து பேசிய பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.

அப்போது என்ன பேசப்பட்டது என்பதை செல்வமணிதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ரஜினியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருப்பது-

எனக்கு பிடிக்காத சில சொற்களில் வேலை நிறுத்தம் என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல் பொது நலத்தை கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் பெப்ஸி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கிற முறையில் எனது அன்பான வேண்டுகோள். – இப்படிக்கு ரஜினிகாந்த்.

திரையுலகத்தின் மூத்தவர் மட்டுமல்ல, சூப்பர் பவர் என்ற முறையிலும் ரஜினி பேச்சை கேட்டு நல்ல பாதையை திறந்துவிடுங்க சாமீகளா…

1 Comment
  1. vincent Rover says

    Super Star is always Super Star.
    Long Live my Demi God Rajini

Leave A Reply

Your email address will not be published.