என் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! மலேசிய பிரஸ்மீட்டில் ரஜினி

1

மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.

“மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னவென்றால் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியாதது தான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனை செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

“மலேசியாவையும், மலேசிய மக்களையும் நான் மிகவும் விரும்புகிறேன். மலேசியா இவ்வளவு அழகாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 78-ல் (1978) ‘பிரியா’ படத்திற்காக நான் மலேசியா வந்தேன். அதன்பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து நான் மீண்டும் இங்கு வந்துள்ளேன். மலேசியா மொத்தமாக மாறி விட்டது.”

“இங்கு நாங்கள் எடுத்திருக்கும் காட்சிகள் கண்டிப்பாக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த படத்தில் குறிப்பாக ‘கபாலி’ என் கேரக்டர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு மேலும் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த சந்திப்பின் போது ரஜினியுடன், கபாலி படக்குழுவினர் மட்டுமல்லாமல், மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீசும் உடன் இருந்தார்.

1 Comment
  1. பாவலன் says

    தலைவா வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.