அட்லீ ரஜினி சந்திப்பு! அடுத்தப்பட பிளான்?

0

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசையே ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கணும் என்பதாகதான் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதைவிட, நடந்தே சந்திர மண்டலம் போவது சுலபம்! சமீப இயக்குனர்களில் இரண்டு முறை அந்த அதிசயத்தை நடத்திக் காட்டிவிட்டார் பா.ரஞ்சித். இன்னொரு இளைய இயக்குனராக அந்த கம்பீரக் கோட்டில் கால் வைக்கப் போகிறார் அட்லீ.

விஜய் அட்லீ காம்பினேஷன் படத்தை தவறாமல் பார்த்து ரசித்ததுடன், அட்லீ விஜய்க்கு போனில் வாழ்த்து சொல்லவும் மறந்ததில்லை ரஜினி. லேட்டஸ்ட்டாக அட்லீயை தன் வீட்டுக்கே வரவழைத்து கதை கேட்டாராம். திருப்தி.

காலா, எந்திரன் 2 வுக்கு பின் ரஜினி நடிக்கப் போவது அட்லீ இயக்கத்தில்தான் என்கிறது சற்றே அதிகாரபூர்வமான தகவல்கள். இந்த படத்தை தயாரிக்கவிருப்பது யார் தெரியுமா?

இதே அட்லீயால் மெர்சல் படத்தில் அனுபவங்களை(?) வாரிக் கட்டிக் கொண்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளிதான். என்னதான் இருந்தாலும் கடைசியில் மெர்சலால் கொழுத்த லாபம் என்பதால்தான் இந்த முடிவு.

Leave A Reply

Your email address will not be published.