ரஜினி பேக் டூ கபாலி? மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்!

0

பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி, மெல்ல கலைப்புலி தாணுவிடம் விஷயத்தை சொல்ல, அப்படியே அது ரஜினியின் காதுக்கு போனதாம். அப்டியா? ஓ.கே என்றாராம் அவர். அப்புறமென்ன? ரஜினி மீண்டும் எந்திரனுக்குள் இணைந்து கொள்வதற்குள் மூன்று நாள் ஷுட்டிங்கை முழு மூச்சாக திட்டமிட ஆரம்பித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

மலேசியாவில் எடுக்கப்பட்ட காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதற்காக மொத்த குழுவும் மீண்டும் கிளம்பி மலேசியாவுக்கு போதென்பது அவ்வளவு சுலபமல்ல. மீண்டும் பாஸ்போர்ட், விசா, துட்டு, துக்கடா செலவுகள் கணக்கில் அடங்காதல்லவா? அதனால் சென்னையிலேயே மேட்ச் பண்ணிவிடலாம் என்று நினைத்தாராம். அங்குதான் ஒரு கட்டை! ரஜினி உள்ளிட்ட அத்தனை பேரின் காஸ்ட்யூம்களும், இன்னபிற செட் பிராப்பர்ட்டிகளும் மலேசியாவில்தான் இருக்கிறது. சென்னை வந்து சேரவில்லையாம்.

எந்த காட்சியை எடுக்க வேண்டுமோ, அந்த காட்சிக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமென இயக்குனர் திட்டமிட, எடுத்துவர கிளம்பியிருக்கிறார்களாம் அசிஸ்டென்ட் டைரக்டர்கள்.

பார்த்து பார்த்து செதுக்குறாங்க. பரவசமே கிட்டட்டும்! டும்… ம்…!

Leave A Reply

Your email address will not be published.