கதவை அடைத்த ரஜினி! கஜ கர்ணம் போடும் லாரன்ஸ்!

1

மக்கள் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட லாரன்ஸ், ரஜினி ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றியதை தொடர்ந்து, ‘ஐயா.. சாமீ அது எனக்கு தெரியாம நடந்த விஷயம்’ என்று டைரக்டர் மீது பழியை தூக்கிப் போட்டுவிட்டார். ஆனால் தனக்கிருக்கும் ஞான ஒளியால் தனக்கு முன்னாலிருக்கும் ஊன ஒளியை கண்டு கொள்கிற அளவுக்கு புத்தி சாதுர்யம் படைத்த ரஜினி, அந்த நிமிஷத்திலிருந்தே லாரன்ஸ்சுக்கு புள்ளி வைத்துவிட்டார்.

ஜல்லிக்கட்டு விஷயத்திலேயே லாரன்ஸ் செய்த அரசியலை நமுட்டு சிரிப்போடு கவனித்துக் கொண்டிருந்தவர்தானே ரஜினி? அரசியலில் நுழைந்து விட்ட இந்த நேரத்தில் யார் யார் தன்னுடன் இருக்க வேண்டும். யார் யார் இருக்கக் கூடாது என்பதை அறியாதவரா அவர்?

கடந்த சில மாதங்களாகவே ரஜினியை நேரில் சந்திக்க முன் அனுமதி கேட்டு வருகிறாராம் லாரன்ஸ். ஆனால் அங்கிருந்து எந்த வித பச்சை விளக்கும் இந்த வினாடி வரைக்கும் எரியவில்லை என்பதுதான் ஷாக். இதை புறக்கணிப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவரும் இல்லை லாரன்ஸ். வேறு வழியில்லாமல் தன்னிச்சையாகவே அறிவித்துவிட்டார். நான் ரஜினியின் கட்சியில் இணைந்து அவரது கரத்தை வலுப்படுத்துவேன் என்று. அவரே தேடிச்சென்று ரஜினி ரசிகர்களை சந்தித்து வருவது தனிக்கூத்து.

இப்போது இன்னொரு அரிய பெரிய மகத்தான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார். அது ரசிகர்களின் வீடு தேடிப்போய் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிற திட்டம். நாட்ல பெட்ரோல் விலையேறிடுச்சு. ரேஷன் கடையில அரிசிக் கிடைக்கல. குடிக்கவே தண்ணீர் இல்ல என்று ஆளை நசுக்குகிற விஷயம் ஆயிரம் இருக்கிறது.

இந்த கொடுமையில வீடு தேடி போட்டோ என்கிற விஞ்ஞான சிறப்பு மிக்க மேட்டரை கையில் எடுத்துக் கொண்டு சுற்றக்கிளம்பியிருக்கும் இவரை மாதிரி ஆட்களை என்ன பண்ணலாம்?

1 Comment
  1. Srikanth says

    டைரக்டர் ரஞ்சித் உங்களை யாருடா கோட் போட கூடாதுன்னு சொன்னது? என்ன கனவு கண்டையா? உன் காசு, நீ இந்த வெய்யல்ல கோட் மேல ஜட்டி கூட போட்டுக்கிட்டு வா, யாரும் உன்னை கேக்கமாட்டாங்க. உன் இந்த முட்டாள் தனமான வசனத்தை ரஜினி என்ற கேனயன் திரைல பேசி வேற இருக்கான். இப்ப லாரன்ஸ் கோமாளி ஆட்டக்காரன் தொல்லை வேற

Leave A Reply

Your email address will not be published.