காட்டுமிராண்டித்தனம்! எச்.ராஜாவுக்கு ரஜினி சுளுக்கு!

0

எச்.ராஜா பெரியார் பற்றி கருத்து தெரிவித்து மூன்று நாட்களாகிவிட்டது. பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, பி.ஜே.பி ஆபிசில் குண்டு வீச்சு, அதற்கப்புறம் கமலில் ஆரம்பித்து கமர்கட்டு யாவாரி வரைக்கும் கண்டனம் தெரிவித்த பின்பும் ரஜினியிடமிருந்து ஒரு தும்மலும் இல்லை.

ரஜினி கருத்து சொல்லிட்டாரா? கண்டனம் தெரிவிச்சுட்டாரா? என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கண் பூக்க காத்திருந்தது தமிழ்நாடு. நல்லவேளையாக அதற்கொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நேரம். வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினியை சூழ்ந்து கொண்டது பிரஸ்.

அவர்களுக்கு பதிலளித்த ரஜினி, ‘பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனமானது’ என்று கூறினார்.

இப்போதெல்லாம் வெட்டு ஒன்று, துண்டு நாலாக பேசுகிற விதத்தில் கமலை விட, ரஜினிக்கே அதிக மார்க். அதுவும் ரஜினி பி.ஜே.பி யின் நிழல் என்று சிலர் பேசி வரும் வேளையில் இப்படி அதிரடியாக கருத்து கூறியது ரஜினி மீதிருக்கும் மதிப்பை மேலும் உயர்த்துவதாகவே அமைந்திருக்கிறது.

இப்படியே அனல் வீசுங்க ரஜினி சார்…

Leave A Reply

Your email address will not be published.