முதல் கேட்ச்சையே தவற விட்ட ரஜினி ரசிகர்கள்! இதானா உங்க டக்கு?

8

எண்ணி இருபத்து சொச்சம் பேர் இருந்தால் பெரிய விஷயம். தமிழர் விடுதலை படை என்றொரு கட்சியை வைத்துக் கொண்டு, ஊரில் எங்கு சலசலப்பு கேட்டாலும், அங்கு டபாரென குதித்து ‘படீர் திடீர்’ கிளப்பி வருகிறார் ஒரு பெண்மணி. பெயர் வீரலட்சுமி. இவருக்கு இருக்கிற கோதா குபீர் பாய்ச்சல்கள் கூட ரஜினி ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே… இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது?

இன்று சென்னையில் கூடிய வீரலட்சுமியின் வீரப்படை, ரஜினி வீட்டை முற்றுகையிடக் கிளம்பியது. கோரிக்கை? ‘ரஜினி தமிழரல்ல. அதனால் அவர் தமிழ்நாட்டு அரசியலுக்கு வரக் கூடாது’ என்பதுதான். போகிற வழியிலேயே இவரை கைது செய்து வேனில் ஏற்றிவிட்டது போலீஸ்.

இவரே இப்படி என்றால், ‘ரஜினி மண்டையில் மூளையில்லை’ என்று சொன்ன ஒருவருக்கு எதிராக அட்லீஸ்ட் ஒரு அறிக்கை கூட விடாத ரஜினி ரசிகர் மன்றப்படை, தமிழ் நாட்டில் எப்படி அரசியல் செய்து எப்படி ஆட்சியை பிடிக்கப் போகிறார்களோ?

அண்மையில் ரஜினி பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. நாஞ்சில் சம்பத், வளர்மதி போன்ற ‘தேர்ட் கிரேட்’ அரசியல்வாதிகள் கூட இப்படியெல்லாம் கீழிறிங்கி பேசுவார்களா தெரியாது. ஆனால் “ரஜினிக்கு மண்டையில் ஒன்றுமில்லை” என்று பேசியிருக்கிறார் கட்ஜு.

இதை கேட்ட பின்பும் காதில் வாங்கிக் கொள்ளாது போலவே இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். கட்ஜூ வீட்டை தேடிக் கண்டு பிடித்து கிலி கிளப்பினால்தானே, ‘யானை வரும் பின்னே… தரை அதிரும் முன்னே’ என்பது தெரிய வரும்?

நீங்கள்லாம் அரசியலுக்கு வந்து… நாட்டை புடிச்சு… வௌங்கிரும்!

பின்குறிப்பு- சிம்புவின் பீப் சாங்குக்கு பேராதரவு தெரிவித்தவர்தான் இந்த கோவில்பட்டி வீரலட்சுமி!

8 Comments
 1. Elangovaa says

  யாரவது சூப்பர் ஸ்டாருக்கு மூளை கொடுத்து உதவி செய்யுங்கள். 25 வருஷமா சொந்த மூளை புத்தி இல்லாம முடிவெடுக்கமுடியாம தடுமாறுறார், பாவம்.

  1. Rahman says

   முதலில், உன்னை போல தமிழ் துரோகிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்பார். உன்னை போல அடிமையாக இருக்க மாட்டார். காசு வாங்கி கொண்டு வாக்கை விற்பனை செய்ய மாட்டார். மொத்தத்தில் உன்னை போல அல்லாமல் ஒரு நல்ல குடிமகனாக தமிழனாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வார்.

   1. Elangovaa says

    நல்ல டாஸ்மார்க் குடிமகனாக சூப்பர் ஸ்டார் குடித்துவிட்டு அவன் பொண்டாட்டி கண்காணிப்புல ஒரு கூட்டமா கொள்ளை அடிப்பான்

    1. காலா says

     ஜெயாவிக்கும் கருணாவிற்கு அடிமையாக இருக்கும் ….. யே
     உனக்கு என் உத்தம தலைவர் ரஜினி அவர்களை பற்றி என்ன தெரியும் ?

 2. Elangovaa says

  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள். இது போல கேசுகளை எதிர்த்து அவர்களை பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என்று நினைத்து இருப்பார்கள். மத்தபடி ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால் இதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு ஜுஜுபி.

 3. அப்பாஸ்அலி says

  தலைவர் ரஜினி , எங்களுக்கு காத்துக்கொடுத்த பாடமே அமைதி காத்தல் மற்றும் தமிழர் நாகரிக பண்பாடு . ரஜினி ரசிகர்கள் பொறுமைசாலிகள். ரஜினி ரசிகர்களை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்.

 4. இன்பச்செல்வன் says

  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள். இது போல கேசுகளை எதிர்த்து அவர்களை பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என்று நினைத்து இருப்பார்கள். மத்தபடி ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால் இதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு ஜுஜுபி.

 5. raj says

  anthanaa unaken intha polappu!

Cancel Reply

Your email address will not be published.