மிகுந்த வேதனையாக இருக்கிறது! தடியடி சம்பவம் குறித்து ரஜினி வருத்தம்!

2

மெரீனா புரட்சியில் திடீர் திருப்பமாக நாடெங்கிலும் மாணவர்கள் மீது தடியடி! ஒரே நாளில் ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தையும் செயலிழக்க வைத்துவிட்டது போலீஸ். இருந்தாலும் இந்த தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் தாக்கப்பட்டதுதான் கொடுமை. நாடே விக்கித்து போயிருக்கும் இந்த நிலையில், ரஜினி தன் வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவிகளுக்கும் இளைஞர்களும், தாய்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்தியது அறவழிப் போராட்டம். இதுவரைக்கும் வரலாறு கண்டறியாதது. அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்கு உரியது. வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கில்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.

இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் போராட்டத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல் துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல், உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தன் அறிக்கையில் கூறியிருக்கிறார் ரஜினி.

2 Comments
  1. Ranga says

    ரஜினி எந்த மாநிலத்துக்கு போனாலும் பொழைச்சுக்குவான். அறிவாளி. ஒரு பைசா ஏழை மக்களுக்காக வெளில எடுக்காம தமிழ் மக்களின் கடவுள் இவன். கபாலில அந்நிகபாலில அந்நியமாய் சம்பாரிச்ச காசுல ஒரு ரெண்டு கோடி மக்கள் போராட்டத்துக்கு கொடுத்திருக்கலாம். என்னத்த சொல்ல. இவரு இலவசமா அறிவுரை தான் கொடுப்பாரு. ரஜினி பாபா.

  2. விஜய் says

    Shut up your mouth , Ranga

Leave A Reply

Your email address will not be published.