செய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி?

0

ரஜினியை சுற்றி சுற்றி வர ஆரம்பித்துவிட்டது அரசியல். அவர் வந்துட்டா என்ன பண்ணுறது? வராமல் இருக்க வைக்கணும்னா அதுக்கு என்ன பண்ணுறது? என்று தனித்தனியாக அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, அவர் மனசுல இருக்கிற கவலையே வேற… என்கிறார்கள் சிலர். கேட்டால் நமக்கே கஷ்டமா இருக்குன்னா பாருங்களேன்…

அந்த கவலை?

கபாலி படத்திற்கு வெற்றிவிழா நடத்தப்படவில்லையே என்பதுதான் அந்தக் கவலை. அந்தப்படம் ரஜினி பட வசூலிலேயே பெரிய வசூல் என்று புள்ளிவிபரங்கள் தரப்பட்டன. பில்டப்பிலேயே ஓட்டப்பட்ட படம் என்கிற தனிப்பட்ட அழுக்கு இருந்தாலும், ரஜினி பட வரிசையில் அவருக்கு முக்கியமான படம் என்பதில் சந்தேகமேயில்லை. வயதான ரஜினி, வயதானவராகவே தோன்றுகிற தைரியத்தை கொடுத்த படமல்லவா?

படம் மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருந்தா, கபாலியின் லெவலே வேற… என்ற குரல்கள் இப்போதும் எழுந்து கொண்டிருக்க, தன் மன வேதனையை மிக நெருக்கமான சிலரிடம் மட்டும் அவர் பகிர்ந்து கொண்டதாக தகவல். இத்தனைக்கும் தன்னை நாடி வந்து கேட்டால், ஒரு தேதியை கொடுக்கவும் அவர் தயாராக இருந்தாராம்.

ஒரு பெரிய திருவிழாவை, தமிழ்நாடு மிஸ் பண்ணிருச்சோ?

Leave A Reply

Your email address will not be published.