பொங்கலுக்கு அஜீத்! தீபாவளிக்கு விஜய்!!

ரஜினியின் வியூகம்... தெறிக்கும் தன்னம்பிக்கை...

1

இந்த பொங்கலுக்கு அஜீத் படத்துடன் மோத வேண்டும் என்று முடிவெடுத்தவரே ரஜினிதானாம். அதுமட்டுமல்ல, வருகிற தீபாவளிக்கு முருகதாஸ் படத்தை இறக்குவதன் மூலம் விஜய் அட்லீ படத்திற்கும் டஃப் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அவரது திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன? என்று புரியாமல் மண்டையை சொறிந்து கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இன்று வெளியிடப்பட்ட ‘பேட்ட’ பட ட்ரெய்லர், தாறுமாறு லெவலில் இருப்பதால் ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. இப்படியொரு ரஜினியை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்கிற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அதுவும் ட்ரெய்லர் இறுதியில் அவர் கொடுக்கிற டான்ஸ் மூவ்மென்ட் ‘வாரே..வாவ்’ ரகம்!

இது ஒருபுறமிருக்க, ட்ரெய்லரை போலவே முழு படமும் இருந்துவிட்டால் ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு அதுவே பெரிய சப்போர்ட்டாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இன்று காலை ரிப்போர்ட்டுக்குப் பின் இதைவிட பலத்த மாஸ் காட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது விஸ்வாசம் ஏரியாவில். 31 ந் தேதி இரவோ, அல்லது 1 ந் தேதி காலையோ தெறிக்க தெறிக்க விஸ்வாசம் ட்ரெய்லரை வெளியிடப் போகிறார்களாம்.

ஒண்ணு மண்ணாயிருந்த அஜீத், ரஜினி ரசிகர்களை கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட வச்சுராதீங்க பெரிய மனுசங்களா… அது ரொம்ப முக்கியம்!

1 Comment
  1. Sathik Basha says

    தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பதை வைத்து தான் ஒரு ஹீரோவின் மார்க்கெட் எவ்வளவு என்பதை கணிக்கமுடியும். டிக்கெட் முன்பதிவில் எவ்வளவு வசூலித்தது என்பது படத்தின் ஓப்பனிங் வசூலில் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை அது அப்படியே பிரதிபலிக்கிறது. சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கம் தற்போது இந்த வருடத்தில் முன்பதிவில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 2.0 முதல் இடத்திலும், காலா படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
    லைவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது, ஏறகனவே இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

    பேட்ட ட்ரைலர் வெளிவந்து பேட்ட புராணம் தான் எங்கு திரும்பினாலும், அந்த அளவிற்கு பேட்ட அடித்து தூள் கிளப்பியுள்ளது. தற்போது அது மட்டுமின்றி பேட்ட மொத்தமாக பல திரையரங்கை தன் கண்ட்ரோலுக்கு எடுத்து வந்துள்ளது, இதன் மூலம் தலைவர் மேலும் பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்குவார் என்று எதிர்ப்பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.