சூதாட்ட கிளப்பில் ரஜினி! போட்டோவை வெளியிட்ட சுப்ரமணியன் சுவாமி

2

ரஜினியை பிஜேபிதான் இயக்கி வருகிறது என்றொரு எண்ணம் மக்கள் மனதில் நிறைந்துவிட்டது. அதை மாற்ற எப்படியெப்படி எல்லாமோ முயற்சி செய்தாலும், “கொண்டைய மறைக்க முடியலேப்பா…” கதையாகவே அமைந்து விடுவதால், பிஜேபியே ஒரு புதுத்திட்டம் வகுத்தது போல தெரிகிறது. அதன் விளைவுதான் பிஜேபி முக்கியஸ்தர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து ரஜினி குறித்து கேவலமான முறையில் விமர்சித்து வருகிற நாடகக் காட்சி.

அதன் உச்சக்கட்டமாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் ரஜினி அமெரிக்காவிலிருக்கும் சூதாட்ட கிளப் ஒன்றில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெளியிட்டு அவர் ரஜினிக்கு கொடுத்திருக்கும் அடைமொழிதான் அநாகரீகத்தின் உச்சம். காண்க சு.சு ட்விட். (இருந்தாலும், நாடகத்தில் இப்படியெல்லாம் வசனம் இருந்தால்தானே இன்ட்ரஸ்ட்?)

என்னதான் சுப்ரமணியன் சுவாமி, ஒரு பக்கம் ரஜினிக்கு எதிராக விமர்சனங்களை வைத்தாலும் தமிழகத்தில் எடுபடப்போகிறதா என்ன? ஏன்? “ ஒருகாலத்தில் நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன். அதனால் உடம்பு பாழாப்போச்சு. நீங்களாவது உடம்ப பத்திரமா ஆரோக்கியமா வச்சுக்கோங்க” என்று வெளிப்படையாக ரஜினி பேசியதை நிறையவே ரசித்தார்கள் அவரது ரசிகர்கள். அப்படியிருக்க… ரஜினி சூதாடுவது ஒன்றும் பெரிய தேசத் துரோகமும் அல்ல. இதற்கெல்லாம் தமிழகம் சின்னதாகக்கூட முகம் சுளிக்கப் போவதில்லை.

ஐயோ பாவம் சு.சு.

2 Comments
 1. Dingu says

  தலீவரு அமெரிக்காவுல ஒன்னும் சும்மா ஆட்டிட்டு இல்ல. கேசினோ ஓட்டல்ல எல்லா அயிட்டமும் கிடைக்குது, தலீவரு சும்மா டெய்லி ராத்திரிக்கு வெல்லகாரிகளோட குஜால்ஸ்? எவனுக்கு தெரியும்? 40 வருஷம் வரிட்ட்யா ஆடினவன் சும்மா இருப்பானா?

  1. அறிவழகன் says

   எங்கள் மனித தெய்வம் ரஜினி அவர்களை பற்றி பேச எவனுக்கும் அருகதை கிடையாது.
   அவர் சம்பாதித்த பணத்தில் அவர் இஷ்டப்படி என்னவேண்டுமானாலும் செய்வார்.
   யார் என்ன குவினாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை தமிழக முதல்வராக ஆக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.