ரஜினி, கமல், அஜீத், விஜய் அனைவரும் மவுனம்! வெள்ளத்தில் போனதா உள்ளம்?

“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ… மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை சத்தியமாக தமிழகத்தில் வரப்போவதில்லை. (அதற்கும் உதாரணமாக திகழ்வது அண்டை மாநில சினிமாக்கார்கள்தான்)

தன் படங்கள் வரும்போதெல்லாம் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிய ரசிகனின் ஊர், ரசிகனின் வீடு, ரசிகனின் உடமை, ரசிகனின் சட்டை, ஜட்டி, ரசிகனின் கோமணம் எல்லாமே இன்று வெள்ளத்தில் போய் விட்டது. இன்னும் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். “என் ஹீரோவின் கையை கட்டிப் போட்டது எவண்டா…?” என்று குரல் கொடுக்கக் கூட தெம்பில்லாமல் குளிரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் அந்த ரசிகன். ஐயோ பாவம். அறியாத ரசிகன்.

வெள்ளம் தானாக வடிந்து, வெறும் வயிறு அதுவாக காய்ந்து, உச்சந்தலை அதுவாக சூடாகி, அடிக்குடல் அதுவாக மரத்து, எல்லாம் பழகிய பின் தன் கட் அவுட் தலைவன் கசங்கி புழுங்கி ஒரு காசோலையை நீட்டுவான். அதை போட்டோ எடுத்து பிரமாதப்படுத்தும் ஊடகங்கள். அண்டை மாநிலத்துக்கு காட்டுகிற அவசரத்தை கூட சொந்த மாநிலத்தில் காட்டாத இந்த தர்ம பிரபுக்கள்தான், நாளைய தமிழனின் நம்பிக்கை டார்ச் லைட்!

மழை புயல் என்றதும் மறுநாளே ஓடி வந்து 3000 போர்வைகளை கடலூர் மற்றும் சென்னைக்கு சரிபாதியாக பிரித்துக் கொடுத்த சிவகார்த்தியேனின் அவசரம் கூட இவர்களுக்கு வரவில்லையே? சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கு சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆர்டர் கொடுத்து ஆதரவற்றோர்க்கு உணவளித்திருக்கிறார்கள் அதே சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினர். இவை எதையும் அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.

நடிகர் சங்கத்தின் உதவியுடன் சின்னஞ்சிறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஐயோ பாவம்… சங்கத்தேர்தலுக்கு அவர்கள் செய்த செலவில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை இது.

“செய்யுற உதவியை விளம்பரம் இல்லாம செய்யணும்” என்று அதற்கான வழிகளை இன்னும் யோசித்துக்கொண்டேயிருக்கிறாராம் ரஜினி. (நல்ல ஐடியா! தலைவா… எவ்ளோ கொடுத்தேன்னு எவனும் கேட்க முடியாதே? ஆனா ஒண்ணு. கடலூரிலும், சென்னையிலும் வெள்ள நீர் வடியறதுக்குள்ள யோசிச்சிடுங்க தலைவா) தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்குகிற ஒரே ஹீரோ இவர்தான். இதுபோன்ற நிவாரண உதவிகளுக்கு அதிக தொகை கொடுப்பவரும் இவர்தான் என்று சொல்லும்படி ஒருபோதும் கொடுத்ததில்லை அந்த கைகள். நேற்று வந்த ஆஃப் பாயில் மார்க்கெட் ஹீரோக்களின் உதவித்தொகைக்கு நிகராகதான் இருக்கிறது அது. இந்த ஒப்பீடுகள் இருக்கக் கூடாது என்பதற்காகதான் தலைவர் ‘விளம்பரம் இல்லாம’ என்றொரு வரியை உள்ளே செருகியிருக்கிறார் போலும்.

ரஜினியாவது பரவாயில்லை. சீனில் யார் மூலமாகவோ தலையை காட்டிவிட்டார். உலக நாயகனுக்கு இன்னும் வெள்ளத் தகவல் போய் சேரவேயில்லை போலிருக்கிறது. அஜீத்தின் ஈகை குணம் தமிழ்சினிமா இன்டஸ்ட்ரி அறிந்ததுதான். இந்த நிமிடம் வரைக்கும் அவருக்கு என்ன ஆயிற்றோ? அவருக்குள்ளிருக்கும் கர்ணனுக்கும் சேர்த்து கால் ஆபரேஷன் பண்ணிவிட்டானோ இறைவன்?

விஜய், ஆதரவு கரம் நீட்டுகிற விஷயத்தில் ஆயிரம் உள் குத்துகள் உண்டு. ரசிகர் மன்றமே பணத்தை திரட்டி, அதை விஜய் கையால் கொடுக்க வைப்பார்கள். இந்த முறை வசூலிக்கிற ரசிகனே, வாய்க்கால் எது, வாசல்படி எது என்று தெரியாமல் தத்தளிக்கிறான். இவர் என்ன செய்வார், பாவம்?

ஆந்திராவில் புயல் வந்தபோது நம்ம ஊர் நடிகர் நடிகைகள் கொடுத்த உதவித்தொகை லிஸ்ட்தான் இது.

ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம், கார்த்தி – ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் – ரூ.12.5 லட்சம், சமந்தா – ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் – ரூ.5 லட்சம்.

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து முழுசா ஒருவாரம் ஆகிறது. இன்னும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே இவர்கள்? அப்படியென்றால் நன்கொடைக்குப்பின் இருப்பது மனிதாபிமானம் இல்லையா?

கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம். இந்த கேள்வியை ஏன் நடிகர் நடிகைகளிடம் மட்டும் கேட்க வேண்டும்? ஐசிஐசி பேங்க் மாதிரி தமிழ்நாட்டில் பேங்க் நடத்தும் தனியார்களிடம் கேட்டிருக்கலாமே? பஸ் முதலாளிகளிடம் கேட்டிருக்கலாமே? பெட்ரோல் பங்க் ஓனர்களிடம் கேட்டிருக்கலாமே? வியாபாரிகள் சங்கத்திடம் கேட்டிருக்கலாமே? இப்படியெல்லாம் கூட கேள்விகள் வரும். அதில் ஓரளவு நியாயமும் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால் அப்படி கேட்பது யாரென்று நினைக்கிறீர்கள்? கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற அதே பக்தன்தான்!

இந்த டெம்ப்போ இருக்கிற வரைக்கும் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது! உங்க மவுனப் புரட்சியை நடத்துங்க ராசாக்களா!

– ‘கருத்து’ கடலூரான்

16 Comments
  1. sandy says

    அட நம்ம பயலுக அடுத்த படம் வந்தா எல்லாத்தையும் மறந்திடுவாங்கய்யா… நம்ம இவ்வளவு கேவலமா இருக்குறதுனலதான் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான்கிற மன பக்குவத்தில அவங்க இருக்காங்க…

  2. Tamil says

    Idiot fans and selfish actors

  3. இசக்கிமுத்து says

    ஏழை மக்களின் மனம் கவர்ந்த ஒரு நல்ல தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தாம். ஆனால் அவர் ஏன் அரசியலுக்கு வர தயங்குகிறார் என்று தெரியவில்லை. அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் நம் மக்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
    வாழ்க தாய் தமிழ் நாடு வாழ்க பாரதம் .

    1. sandy says

      ஏன்? இருக்கிறதையும் கர்நாடகத்துக்கு கொண்டு போகவா? இவரால எந்த முடிவாவது தீர்கமா எடுக்க முடியுதா? ரஜினிக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கு? கபாலி படம் வருதுன்னு இப்ப மீடியாவுல வர்றாரு, மத்த நேரமெல்லாம் பார்த்தீங்களா?
      ரஜினிதான் இருக்கிறதிலேயே நம்பர் ஒன் சினிமா பொலிடிசியன் (சூத்திரதாரி), இவரு சம்பாதிக்கிற காசுக்கு 10% இந்த மலை வெள்ளத்துக்கு செஞ்சா போதும்யா (இவரு சம்பளம் 30 முதல் 40 கோடி ஒரு படத்துக்கு). இவரு எப்ப படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் தலயில மிளகாய் அறைக்கிரதுனால தான் இத சொல்றேன். இவருக்கு எதுவுமே பேசமா இருக்கிற எத்தனயோ ஹீரோஸ் தேவலாம்..

      1. அருள்ராஜ் says

        ரஜினி படத்தை promote பண்றதக்காக அரசியல் பேசுறாரு ..உதவி செய்யணும்னு சொல்றாருன்னு சொல்றீங்க — அவர் வந்து மீடியாகிட்ட தன் படம் ஓடுவதற்காக வலிந்து அரசியல் பேசுறாரா ..லிங்கா படமாகட்டும்ம் இல்லை மத்த படமாகட்டும் தன்னிடம் கேட்கும் அரசியல் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொன்னால் அவர் படத்துக்கு promote பண்றார்னு அர்த்தமா? நீங்களே உங்கள் மன சாட்சிய தொட்டு சொல்லுங்கள்
        2. ஒரு கோடி ரூபாய் நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு தாரேன்னு சொன்னார். ஆனால் தரவில்லை — நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக முன்னால் PM வாஜ்பாய நேரில் சந்தித்தார் அந்த திட்டத்தை தொடங்க சொல்லி கேட்டு கொண்டார். அந்த திட்டம் செயல் வடிவம் பெறவே இல்லாத பொழுது அதற்க்கு பணம் கேட்டு ரஜினி தராத மாதிரி பேசுவது எந்த வகை நியாயம்
        3. அவர் மகள் திருமணத்துக்கு வர வேண்டாம் என்று அவர் தன ரசிகர்களை கேட்டு கொண்டர்ர் இது அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் உள்ள விஷயம் இதில் 3வது நபர் கேட்பதற்கு ஒன்றும் இல்லை. அவர் துரை அழகிரி திருமனத்த்ருக்கு மதுரை சென்ற பொழுது எண்ணற்ற ரசிகர்கள் பின் தொடர்ந்த பொது கார்த்தி என்ற ரசிகர் விபத்தில் இறந்து விட்டார். ரஜினி சார் கார்த்தி ரசிகரின் குடும்பத்திற்கு 4 லக்ஸ் கொடுத்தார்..இன்ன்கேயும் ரஜினி சார் பணம் கொடுத்தார் என்று சொல்எ வரவில்லை.. ரசிகர்களின் பாதுகாப்பை விருபுவதால் அவர் நிறைய கூடங்களை தவிர்த்து விடுவார் . அவர் பிறந்த நாளுக்கு வெளியூர் செல்வது 1992க்கு பிறகு அதனால் தான்.
        4. நிறைய சொத்துக்களை கர்னடஹவில் வாங்கி உள்ளார் என்கிறார்கள் ..எதாவுது ஆதாரத்தை யாரவாது காடியுள்ளர்களா ? மேலும் அவர் கர்னடஹவில் தான் வாங்கியுள்ளார் என்று சொல்கிற்றீர்கள் பாகிஸ்தனில வாங்கியிருக்கிறார் என்றும் கேட்கலாம். தமிழ் நாட்டில் இருந்தால் எவ்வளுவ்வு அரசியல் இடையூர்கல் இருந்து இருக்கும்..
        தயவு செய்து ஒரு நல்ல மனிதரை பற்றி மட்டமாக பேசுவதற்கு முன் நிறைய யோசியுங்கள் வெறும் பொறாமையினால், இல்லை போலி தமிழ்வாதம் பேசிக்கொண்டு எல்லாவற்றையும் கண்மூடி தனமாக பேசாதீர்கள் நானும் ஒரு தமிழன் தான்.

      2. ஸ்டாலின் ராஜ் says

        ஆமாம் உலக நாயகன் என்ன செய்தார். வெறும் வெத்து அறிக்கையோடு நிறுத்தி கொண்டாரா ????

        தலைவர் ரஜினி அவர்கள் தமிழ் மக்களுக்கு பிடித்தமான தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்தவர் . இதை அந்த ஆண்டவனாலும் மாற்றமுடியாது.

      3. ரவி says

        வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்பதில் உறுதியாய் இருப்பவர் தலைவர்….குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும் இறுதியில் உண்மையே வெல்லும்.
        அன்புடன் ரவி.

  4. srinivasan says

    Comments – மழை வெள்ளத்திற்கு தலைவர் என்ன செய்தார் என்று கொக்கரிக்கிற பொட்டை கோழிகளா.. தலைவரே விகடனில் சொல்லி இருக்கிறார். சொல்லியது போலவே நிவாரண நிதி வழங்குவார்..! அதற்குள் ஏண்டா அவரைப்பற்றி ஏண்டா இவ்வளவு விமர்சனம் பண்றீங்க..! அவர் என்ன முதலமைச்சரா..? மூஞ்சில மீசை வச்ச ஆம்பளை எவனாவது அந்தக் கூட்டத்தில் இருந்தால் மாண்புமிகு முதலமைச்சரிடத்தில் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சரிடத்தில்..அதுவும் இல்லையெனில் உன் தொகுதி Mp..MLA..கிட்ட கேட்க தைரியம் இருக்காடா..? நொன்னைகளா..உன்னோட வார்டு Member கிட்ட கூட பேச தைரியம் கிடையாத நாய்கள் எல்லாம் எங்கள் அன்புத்தலைவர் பற்றி பேசுவதா.?
    பொத்திக்கிட்டு பொழப்பை பாருங்கடா.,!
    அன்புத்தலைவர் பற்றிப்பேச எவனுக்கும் தகுதி கிடையாது..!
    வாழ்க தலைவர்..!

    1. தமிழ் நேசன் says

      Fact Fact Fact

    2. sandy says

      தமிழ்சினிமா.காம், இந்த மாதிரி ஒருமையில் நாகரீகமில்லாமல் போடும் கமெண்டுகளை நிராகரிக்க வேண்டும்…

  5. Vivek says

    ரசிகனுக்கு இவர் தன் மகள் திருமண விருந்து கொடுத்து இப்போ தானே முடித்து உள்ளார்?
    இதே போல் வெள்ள நிவாரணம் அடுத்து உடனே கொடுத்து விடுவார்.
    அதான் அவருக்கு இன்னும் இருக்கும் இரண்டு ரசிகர்கள் கூட அடித்து சொல்லி விட்டார்களே? இன்னும் என்ன சந்தேகம்?

    1. ABDUL AZIZ says

      ரஜினிகாந்தும் ரசிகர்மன்றங்கள் மூலமாக உணவு, துணிமணிகள், போர்வை, மருந்து மாத்திரைகள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் அனுப்பி வைத்து இருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  6. Syed says

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கு உதவ ரூ 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். தமிழக வெள்ள நிவாரணத்துக்கு கடந்த டிசம்பர் முதல் தேதி ரூ 10 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த், அதன் பிறகு பெய்த பெருமழை, சென்னை – கடலூரைத் தாக்கிய வரலாறு காணாத வெள்ளத்துக்குப் பிறகு தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருள்களை அனுப்ப உத்தரவிட்டார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்தில் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் நேரில் இருந்து இந்த உதவிப் பொருள்களை கடந்த 5 நாட்களாக விநியோகித்து வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நிவாரண உதவி மையமாக மாறியுள்ளது. உதவி கேட்டு ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரும் அனைத்து மன்ற நிர்வாகிகளும் வுண்டர்பார் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வரும் வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.சென்னையில் நிவாரணப் பொருள்கள் கிடைப்பது கஷ்டமாக இருப்பதால், ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன. போர்வைகள், புதிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடைகள், நாப்கின்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், பிரட், பால் போன்ற உணவுகள், ப்ளீச்சிங் பவுடர், கொசுவர்த்தி, அத்யாவசிய மருந்து மாத்திரைகள், வெள்ளத்தால் அனைத்தையும் முற்றாக இழந்தவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை ரசிகர்கள் மூலமே விநியோகிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் தனுஷ் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களுடன் கைகோர்த்துள்ளனர்.
    ஆர்பிஎஸ்ஐ என்ற பேஸ்புக் ரசிகர்கள் குழு மூலமும் உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

  7. Gokuladass says

    இரண்டு தினங்களுக்கு முன்பே கோவாவிலிருந்து சென்னை திரும்பிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த நான்காம் தேதியிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளச் சேத விபரங்களை தனது நண்பர்கள் மற்றும் மண்டப நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்தவர், உடனடியாக சென்னை திரும்ப முயன்றாலும், கடுமையான மழைச் சூழல் காரணமாக முடியவில்லை.
    நேற்று முன்தினம் அமைதியாக சென்னை திரும்பியவர் முதலில் விசாரித்தது, வெள்ள நிவாரணத்துக்கு அரசை தாண்டி நாம் எப்படி நேரடியாகச் செய்ய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் (ஆனால் அதற்குள் எந்திரன் 2 ஐ ஆரம்பித்துவிட்டதாக ஏக புரளிகள்). மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசிய பிறகு, நிவாரணப் பொருள்களை ரசிகர்கள் மற்றும் பிற தன்னார்வலர்களுடன் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தர வேண்டும் என்று முடிவு செய்தாராம்.
    சென்னையில் போதிய அளவு பொருட்கள் கிடைக்காததால், பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை அனுப்பச் சொன்ன ரஜினியுடன், ஆர்ட் ஆப் லிவிங் போன்ற அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். கூடவே ஏராளமான ரஜினி ரசிகர்கள்.. இணைய வழி செயல்படும் மிக இளம் வயது ரசிகர்கள்.
    இந்த முறை நிவாரணப் பொருட்கள் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் இருப்பு வைக்கப்படவில்லை. பொறுப்பை மகள்கள் மற்றும் மருமகன்கள் கையில் ஒப்படைத்தவர், விநியோகத்தை ரசிகர்களை நம்பி ஒப்படைத்துள்ளார்.
    கடந்த நான்கைந்து நாட்களாகவே தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (நுங்கம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம்) ஒரு வெள்ள நிவாரண விநியோக மையமாக மிக பிஸியாக உள்ளது. ரஜினியின் மகள்கள், மருமகன் தனுஷ், பிஆர்ஓ ரியாஸ் போன்றவர்கள் மிக பிஸியாக அங்கே பொருள்களைப் பிரித்து மாவட்டவாரியாக அனுப்பி வருகின்றனர். இதுவரை அனுப்பப்பட்டுள்ள உதவிப் பொருள்களின் மதிப்பு ரூ 10 கோடி என்கிறார்கள். இன்னும் சில தினங்களுக்கு நிவாரணப் பொருள் விநியோகம் தொடர்கிறதாம். இன்று காலை கூட ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து 5-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருள்கள் குவிந்தன. வெறும் அன்றாடத் தேவைகளுக்கான உணவு, தண்ணீர், போர்வை, நாப்கின், ரொட்டி, பால் பொருட்கள் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மறுவாழ்வுக்குத் தேவையான சமையல் சாதனங்கள், முக்கிய வீட்டு சாமான்கள், கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றை வழங்கவும் முடிவு செய்துள்ளார்களாம். இந்தப் பணியிலிருப்பவர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து போடப்பட்ட முக்கிய நிபந்தனை…’எக்காரணம் கொண்டும் இந்த உதவிகளை விளம்பரப்படுத்த வேண்டாம்… தன் பெயர், படம் எதையும் பயன்படுத்த வேண்டாம்’ என்பதுதானாம். ஏற்கெனவே முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ 10 லட்சத்தை ரஜினி அளித்துள்ளார். சென்னையை மழைவெள்ளம் கடுமையாகத் தாக்குவதற்கு முன்பே இந்தத் தொகையை அவர் தந்துவிட்டார். சமீபத்திய மழை வெள்ளத்தின்போது, தனது ராகவேந்திரா மண்டபத்தை ஏழை மக்கள் தங்குவதற்காகத் திறந்துவிட்டுள்ளார்.
    வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகத்தான் வந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்!

  8. Perumal says

    SUPERSTAR RAJINI’S NOBLE GESTURE FOR CHENNAI’S HEROES
    Chennai has indeed succeeded with respect to recovering quickly from the devastations that torrential rains caused to this city of beauty. The next round of action is to tidy the surroundings, as huge amount of debris lies here and there. Sanitary workers from different districts (Namakkal, Melur, Karur, Hosur, Salem, Rasipuram, Attur, Tindivanam, Dharmapuri, Mettur & Edappadi, Pallipalayam, Tiruppur) have come in large numbers to do the needful.

    Superstar Rajini has provided shelter to all these workers in his Raghavendra Mandapam along with all other basic necessities. With respect to the number of health threats that are rising post the Chennai floods, these sanitary workers’ role is vital and crucial. By helping them with their basic needs, the process would fasten up and be more efficient.

    This is a noble act. Thank you Superstar!

  9. Vivek says

    ராகவேந்திரா மண்டபத்தில் 1000 துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்குமிடம்.. ரஜினி ஏற்பாடு! சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த். வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி. இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கலைஞர் பேமிலி ஹீரோ? இயக்குகிறார் விஜயகாந்த் ரசிகர்! ஆஹா இதல்லவோ கூட்டணி?

‘முத்துநகரம்’ படத்தை இயக்கிய திருப்பதிக்கு, அடுத்த படத்தில் முத்தான ஹீரோதான் கிடைத்திருக்கிறாரா என்பதை பார்க்க இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் போதும். ஆனால் மேற்படி ஹீரோ, திமுக...

Close