கபாலி வெற்றிப்படம்! கன்பார்ம் பண்ணிய ரஜினி! லட்டராகவே எழுதிட்டாரு…

3

அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு-

‘’என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

‘லைக்கா’ தயாரிப்பில், திரு.ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான, மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடல்நலத்திற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது.

அதை ஒட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வெடுத்தும், மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்குத் திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாகப் பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி, இயக்கிய பா.ரஞ்சித் அவர்களுக்கும், குழுவினர் அனைவருக்கும், சக நடிக, நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய எனது அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி!

3 Comments
 1. Ghazali says

  He has mentioned the year as 2017.

 2. தமிழ்நேசன் says

  யுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது.
  முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.
  சல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது.
  கனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கபாலியின் உண்மையான வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மற்றும் இந்தி இணையதளங்களில் மிகக்குறைவான தொகையையே கபாலி வசூல் என்று வெளியிட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் சில பகுதிகளில் கபாலி வசூலித்த தொகை மட்டுமே என்பது முக்கியமானது.
  கனடாவில் கபாலி 1.67 கோடிகளும், யுகே மற்றும் அயர்லாந்தில் 2.47 கோடிகளும், மலேசியாவில் 4.66 கோடிகளும் வசூலித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

 3. அன்புமணி says

  1. இந்தியாவிலேயே அதிக முதல் நாள் வசூல்

  கபாலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி, ஷாருக்கானின் ‘Happy New Year’ முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.

  2. சுல்தான் சாதனை முறியடிப்பு

  இந்த வருடத்தின் அதிகபட்ச வசூல் ஈட்டிய படம் சல்மான் கானின் சுல்தான். இந்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.

  3. அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ்

  இந்தியாவில் மட்டும் சுமார் 4000 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. வெளிநாடுகளிலும் சேர்த்து சுமார் 9000 தியேட்டர்களில் ரிலீஸானது.

  4. அமெரிக்காவில் பாகுபலி சாதனை முறியடிப்பு

  அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளின் மூலம் சுமார் 2 மில்லியன் டாலர் வசூல் ஈட்டி, பாகுபலி சாதனையை முறியடித்தது.

  5. கேரளா, கர்நாடகாவில் வசூல் சாதனை

  கேரளா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில மொழி படங்களை விட முதல் நாள் அதிக வசூல் ஈட்டியுள்ளது கபாலி. கேரளாவில் 4.2 கோடி மற்றும் கர்நாடகாவில் 5.1 கோடி வசூலித்தது.

  6. மலாய் மொழியில் முதல் தமிழ் படம்

  பல தமிழ் படங்கள் பிற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் கபாலி படம் மட்டும் தான் மலாய் மொழியில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

  7. டிக்கெட் முன்பதிவில் செய்த சாதனை

  இப்படத்தின் டிக்கெட் முன்பதிவை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். முன்பதிவு திறந்த ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் புக்காகிவிட்டது.

  8. உலகின் பெரிய திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம்

  பிரான்சில் இருக்கும் Le Grand Rex திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம்.

  9.முதல் வாரத்தில் அதிக வசூல் பட்டியலில் 6வது இடம்

  Star Trek, Tarzan, Ice Age, SkipTrace, The Secret Life Of Pets போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையோடு 6வது இடத்தை பிடித்தது கபாலி.

  10. விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம்

  ஏர்ஏசியாவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கபாலி படத்திற்கு விமானத்தில் கபாலி படத்தை ஒட்டி விளம்பரம் செய்தனர். அதுமட்டுமில்லாது தங்க நாணயத்தில் கபாலி, ஏர்டெல்லில் கபாலி என பிரம்மிப்பூட்டும் புரொமோஷன்கள்.

  11. இறுதியில் தன் சாதனை தானே முறியடித்த பெருமை

  இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் வசூல் சாதனையை ரூ. 210 கோடி வசூல் செய்து தன் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் ரஜினி.

Reply To Ghazali
Cancel Reply

Your email address will not be published.