என்னை வீட்டுக்குள் சேர்க்க வேண்டாமென சொன்னாரா? ரஜினி பற்றி அனிருத் மனம் திறப்பு

0

முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி…” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும் போல என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரம். முன்னைவிட படு ஸ்பீடாக இருக்கிறார் தம்பி. அந்த படத்திலிருந்து கழற்றப்பட்டார், இந்தப்படத்திலிருந்து கழற்றப்பட்டார் என்ற தகவல்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, புதுப்புது படங்களாக அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களாக சைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

லேட்டஸ்ட்டாக கவுதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்டிருக்கிறார் அனிருத்!

நடுவில் ‘கொடி’ படத்திலிருந்து தனுஷால் விரட்டப்பட்டார், “அனிருத்தை வீட்டுக்குள் விடவே விடாதே” என்று ரஜினி சொன்னதாக கூறப்பட்டது என்று பென்சில் தம்பியின் நெஞ்சில் பொத்தல் பொத்தலாக பொல்லாப்பு. இந்த நேரத்தில் கூட மனம் விட்டு பதில் சொல்லலேன்னா எப்படி? படு விளக்கமாக பேச ஆரம்பித்திருக்கிறார் அனிருத்.

கொடி பட விவகாரம் இட்டுக்கட்டப்பட்ட தகவல்தான். ஏன்னா, நான் அதில் வொர்க் பண்ணலே என்பது ஆரம்பத்திலேயே முடிவாகிவிட்ட விஷயம். அதற்கப்புறம்தான் பீப் பாடல் பிரச்சனையை வந்தது. அதே மாதிரிதான் ரஜினி சார் சொன்னதாக வந்த தகவலும். இப்பவும் நான் ரஜினி வீட்டுக்கு நினைக்கும் போதெல்லாம் போய் கொண்டுதான் இருக்கேன். அதே பழைய பாசத்தோடவும் அன்போடவும் என்னை வரவேற்கிறாங்க. இவங்களா எழுதி இவங்களா விளக்கம் கேட்டால் நான் என்ன பண்ணுறது? என்கிறார்.

அப்பளத்தை பொறிக்கறதே, உடைக்கணும்னுதானே அனிருத்?

Leave A Reply

Your email address will not be published.