காலியாகிறது பிரபல சேனல்! கதற வைத்தார் ரஜினி பட தயாரிப்பாளர்!

1

பலமேயில்லாத விதையாக இருந்தாலும் பரபரவென வேர் விட வைக்கிற பூமி நம்ம தமிழ்நாடு. இங்கு மத யானை பலத்துடன் ஒருவர் வந்தால் வாழ வைக்காமல் விட்டு விடுமா? என்னதான் வேல்முருகன்களும், திருமா வளவன்களும் தொண்டை வலிக்க கத்தினாலும், தொண்டரடிப் பொடியாழ்வார்களின் ஆதரவுடன் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது லைக்கா நிறுவனம்.

ராஜபக்சே பணம், இலங்கையுடன் கள்ள உறவு என்றெல்லாம் லைக்கா நிறுவன அதிபார் சுபாஷ்கரன் அல்லிராஜா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், கத்தி வேகத்தில் தமிழ்சினிமாவில் நுழைந்தது அவரது வியாபார டெக்னிக். அதற்கப்புறம் அவர் தயாரித்த படங்கள் ரிலீஸ் ஆகிற நேரத்தில் முணுக் என்ற சப்தத்தை கூட எழுப்ப வில்லை குட்டி குட்டியாய் முளைத்த சோ கால்டு தமிழனத் தலைவர்கள். தனது அசுர வேகத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறார் லைக்கா நிறுவனர். எப்படி? தமிழில் ஒரு டி.வி சேனல் துவங்கப் போகிறாராம். எந்திரன் 2, மருதநாயகம் என்று பெரும் பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் லைக்கா, இப்படியொரு முடிவை எடுத்திருப்பதற்கு பின்னால் இவ்விரு பட பிரமோஷன்களும் அடங்கியிருக்கிறது.

லைக்கா நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் தமிழகத்தின் முன்னணி சேனல் ஒன்றிலிருந்த முக்கால் வாசி ஊழியர்கள் அப்படியே லைக்கா பக்கம் ஒடிவிட்டார்கள். கத்தி படத்தின் பட்ஜெட் என் ஒரு நாள் வருமானம் என்று சுபாஷ்கரன் கொடுத்த பேட்டி இன்னும் அவர்களின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்குமோ என்னவோ? இந்த அசுர வேக சேனல் தாவலை கண்டு அரசியல்வாதிகளே மிரண்டு போயிருக்கிறார்களாம். அதுபோக இன்னொரு முக்கியமான தகவல்.

வாங்க காபி குடிச்சுகிட்டே பேசலாம் என்று விஐபிகளை அழைத்து வளவளவென பேசும் அந்த சிங்காரியையும் உங்க கூடவே அழைச்சுட்டு வர முடியுமா என்று கேட்டிருக்கிறதாம் லைக்கா. “அதுக்கென்ன… தூக்குறோம் அலேக்கா!” என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்களாம் சேனல் தாவல் ஆசாமிகள்.

1 Comment
  1. Varothayan says

    லைக்கா, டி.வி. சேனல் தொடங்கப் போகுது எண்டதெல்லாம் ஒரு செய்தியா??? அவங்க தொடங்கி ரெண்டு வருசத்துக்கும் மேலாக ஓடிக்கிட்டிருக்கு.. அதை வேணும்னா தமிழ்நாட்டில டெவலப் பண்ணலாம்.

Leave A Reply

Your email address will not be published.