மேடையில் தாமரை! பிஜேபி சிக்னலோடு புது ஸ்டெப் வைக்கிறாரா ரஜினி?

3

ஜெயலலிதா மறைந்த நிமிஷத்திலிருந்தே தமிழ்நாட்டில் வலைவீசிக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.

மக்களுக்கு புடிச்சவரா இருக்கணும். தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவரா இருக்கணும். ஏராளமான ரசிகர்களை கொண்டவரா இருக்கணும். முக்கியமா அவர் வசிக்கும் வீடு போயஸ் கார்டன்ல இருக்கணும். அப்பப்ப கேளம்பாக்கத்துல தங்குறவராகவும் இருக்கணும் என்று கூரிய கண்களோடு திரிந்த பி.ஜே.பி க்கு ‘அட்ரஸ் வெரிபிகேஷன்’ மிக சரியாக அமைந்துவிட்டது. யெஸ்… அவர்தான் ரஜினி.

நடுநடுவே விதிகளை கொஞ்சம் தளர்த்திய பி.ஜே.பி, அந்த இடம் ஆழ்வார்ப் பேட்டையாகவும் இருக்கலாம் என்று ஜர்க் அடித்தது தனிக்கதை. வலை ஸ்டிராங்காக இறுகியிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்பிய நிகழ்வுதான் இன்று சென்னையில் நடந்த ரஜினி- ரசிகர்கள் சந்திப்பு. சில வருஷங்களுக்கு முன் இதே போலொரு சந்திப்பை நிகழ்த்தினார் ரஜினி. அப்போது மேடையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது. கடமையை செய். பலனை எதிர்பார் என்பதுதான் அந்த வாசகம்.

இப்போது வேறொரு பின்னணியுடன் செட் பண்ணப் பட்டிருந்தது அந்த மேடை. நீல நிற பின்னணியில் வெள்ளை தாமரை மலர்ந்திருக்க, அதன் மீது ரஜினியின் பேவரைட் கை முத்திரை இருந்தது. பாபா படத்தில் வரும் இந்த முத்திரை, சென்ட்டிமென்ட்டாகவே சரியில்லையே என்று ரசிகர்கள் முணுமுணுத்தாலும், பாபா ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டார். இந்த முறை வெற்றியை கொடுத்துருவார் என்று நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ? அந்த தாமரைதான் இப்போது பல அரசியல் விமர்சகர்களின் கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு யூகத்திலேயே வண்டிய உருட்றது? வந்துருங்க… பார்த்துக்கலாம்!

3 Comments
  1. Kumaran says

    Lotus is something he use from baba time itself..infact baba was from his prod company lotus internationals..so better know some basics before wrting some craps..for u guys he keep telling media is too much confusing abt his political point. He ia clear n his true fans are also clear.

  2. மதிவாணன் says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே, ஊழல் கட்சிகளை ஒட ஒட விரட்டி அடித்து தமிழக மக்களை காக்க அரசியலுக்கு வாருங்கள்.

  3. Amudha says

    தமிழ்நாடு நன்றாக இருக்க, தமிழக மக்கள் நன்றாக இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆக வேண்டும். அதற்கு அந்த ஆண்டவன் மனசு வைக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.