ரஜினியின் கோபத்திற்கு ஆளான தனுஷ்!

1

ரஜினியின் இத்தனை ஆண்டுகால மரியாதையை எள்ளி நகையாடிவிட்டது காலா. பாபா படுதோல்வி படம் என்றால், காலா கணக்கில்லாத டென்ஷனை ஏற்றிவிட்டு விட்டது குடும்பத்தில். இந்தப்படம் எப்படி உருவானது? ஏன் உருவானது? இதற்கெல்லாம் விடை தேடக் கிளம்பினால், அதுதான் சோகத்திலும் சோகம்.

ஒரு நாள் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசிய ஐஸ்வர்யா தனுஷ், “அப்பா… தனுஷுக்கு நிறைய கடன். கிட்டதட்ட நாற்பது கோடி. நீங்க கால்ஷீட் கொடுத்தா அவர் ஒரேயடியாக எல்லாத்தையும் அடைச்சுட்டு நிம்மதியாகிடுவார்” என்று சொல்ல, “அதுக்கென்னம்மா… ஆகட்டும்” என்றாராம் ரஜினி. ஆனால் தனக்கான சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை அவர். சுமார் ஐம்பது கோடியை தனது சம்பளமாக நிர்ணயித்து படத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார்.

சொல்வதை கேட்கிற இயக்குனர், சம்பளமாக என்ன தருகிறார்களோ, அதை வாங்கிக் கொள்கிற இயக்குனர், அதைவிட கட்சி துவங்குகிற நேரத்தில் ஜாதிய ரீதியாக சப்போர்ட் தருகிற இயக்குனர் என்று முக்கால பூஜைக்கு தற்கால நிவாரணமாக கண்முன் வந்தவர் பா.ரஞ்சித். பொசுக்கென்று அமுக்கிப் போட்டு காரியத்தில் இறங்கிய தனுஷ், ரஜினி இருவருக்கும் நடுவே இப்போது மனக்கசப்பு வரக் காரணமே ஐஸ்வர்யாதானாம். ஏன்?

இந்தப்படத்திற்கு ‘இணைத் தயாரிப்பு’ என்று ஐஸ்வர்யாவின் பெயரை டைட்டிலில் போடுவார் என்று எதிர்பார்த்தாராம் ரஜினி. அது நடக்கவில்லை என்றதும் கடும் மன வருத்தத்தில் இருந்தாராம் அவர். இது குறித்து தனுஷிடம் பேசியபோதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல… தாணு கபாலிக்கு விளம்பரம் செய்தது போல இந்த காலாவுக்கு தனுஷ் பெரிய அளவில் விளம்பரம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அதுவும் நடக்கவில்லை.

கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தனுஷ் மீது ஏற்பட்ட கோபத்தைதான் வேறு வேறு வழியில் அவர் பொதுவெளியில் காட்ட…. அதுவே வினையாக முடிந்துவிட்டது.

காலா படம் ஓடாமல் போனதற்கு காரணம், ரஜினி மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் வெறுப்பா, அல்லது படமே கபாலியின் பார்ட் 2 வாக இருந்த காரணத்தாலா? எது எப்படியோ?

தற்போதைய நிலவரப்படி, தனுஷின் கால்குலேஷன் கண்டபடிக்கு தடுக்கி விழ… மேலும் கடன்காரர் ஆகி நிற்கிறாராம் அவர்.

1 Comment
  1. KABALI says

    KAALAA BLOCKBUSTER MOVIE.

Leave A Reply

Your email address will not be published.