சசிகலாவுக்கு சப்போர்ட்! மீண்டும் சீனுக்கு வரும் ராமராஜன்!

0

ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூட அனுபவிக்க முடியாமல் துவக்க நிலையிலேயே டக் அவுட் ஆக வைத்தது விதி. தொடர்ந்து அதிமுக வின் பிரச்சார பீரங்கியாக இருந்த ராமராஜனுக்கு, சாண் ஏறினால் முழம் சறுக்குகிற அளவுக்குதான் அமைந்தது எல்லாமே! மளமளவென அம்மாவின் மனதில் மீண்டும் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அந்த பலத்த ஆக்சிடென்ட்.

கார் விபத்தில் சிக்கி படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை சென்னைக்கு வரவழைத்து, அப்போலோவின் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தார் ஜெ. மொத்த செலவையும் முதல்வரே ஏற்றுக் கொண்டது, ராமராஜன் மீது அவருக்கு இருந்த அன்பிற்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு. அப்படியெல்லாம் உயிர் பிழைத்து வந்தாலும், கழகமும், தலைமையும் ஏனோ அவருக்கு ஒரு பதவியும் தராமல் வைத்திருந்தது. அண்மையில் வந்த சட்டமன்ற தேர்தலில் கூட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

மாறாக கருணாஸ் போன்றவர்களெல்லாம் உள்ளே வந்தார்கள். சற்று மன வருத்தத்தில் இருந்த ராமராஜன், அம்மா மறைவுக்குப் பின் என்ன முடிவெடுத்திருக்கிறார்?

வேறென்ன…? எல்லா டாப்புகள் போலவே சின்னம்மாவுக்கு கை கொடுக்க முன் வந்துவிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அஇஅதிமுக வின் புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு அம்மாவிற்கு பின் தகுதியானவர் சின்னம்மா சசிகலாதான் என்கிறார் ராமராசுன். புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் முழுவதுமாக உடனிருந்து பயிற்சி எடுத்தவர் சின்னம்மா. அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற சின்னம்மா சசிகலா அவர்கள் பொதுசெயலாளர் பதவிக்கு வருவதற்கு தொண்டர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.