உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி ஆர்.டி.ராஜா ஹேப்பி!

1

முட்டு சந்திற்குள் நுழைந்த பட்டத்து யானை போலாகிவிட்டது சீமராஜாவின் ரிலீஸ். எப்படியோ, போராடி புரண்டு சொன்ன நேரத்தில் வெளியானது போன ஜென்மத்து புண்ணியம். அவ்வளவு போராடி திரைக்கு வந்த ‘சீமராஜா’வை ரசிகர்கள் சீரான மன நிலையோடு ஏற்றுக் கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை. கலவையான கருத்துகள். களேபரமான விமர்சனங்கள் என்று தோரணம் கட்டிவிட்டார்கள்.

ஒரே படத்திற்குள் இவ்வளவு விஷயங்களை அடக்க வேண்டுமா? அந்த பாகுபலி கெட்டப் தேவைதானா? அந்த போர்க்கள காட்சிகள் பொருத்தமாக இருக்கிறதா? சிவகார்த்திகேயன் ஒரே நாளில் அஜீத் விஜய் ஆகிவிட முடியுமா? என்றெல்லாம் ஆளாளுக்கு அலசினாலும், முதல் நாள் கலெக்ஷன் முழு திருப்தி.

படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இன்று ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது-

“இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது , அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நிலையை தாண்டி , அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா.

முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரை இடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நன்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும்,இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள் “

பணம் போட்ட அவரே சேஃப்டியாக ஃபீல் பண்ணுவதால், இவ்வளவு வெயிட்டையும் ஆர்.டி.ராஜா தலையில் ஏற்றி வைத்த இயக்குனர் பொன்ராம் மீண்டும் இதே காம்பவுண்டில் படம் இயக்க வாழ்த்துவோம். வேறு என்ன சொல்ல?

1 Comment
 1. Daniel Raj says

  சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24 ஏஎம் நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் ‘சீமராஜா’, சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

  இந்தப் படத்தின் முதல் நாள் வசூலே 13.5 கோடி என பகிரங்கமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

  இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்டி ராஜா கூறுகையில், “இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.

  சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா. முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது.

  சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரை இடபட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நன்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்,” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.