பின்வாங்கும் தியேட்டர்கள்! பீதியில் மெர்சல்!

0


சிக்கி சீரழிவதில் சின்னப்படம் என்ன? பெரியப்படம் என்ன? என்கிற பதட்ட நிலையை உருவாக்கிவிட்டது மெர்சல். இந்த செய்தி வெளியிடப்படும் இந்த நிமிஷம் வரைக்கும் கூட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மெர்சல் தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோ விஜய்யும்.

ஒரு படத்தில் நடித்தோம்… அதோடு விட்டது பணி என்று ஓய்ந்துவிடாமல் தன்னாலான எல்லா முயற்சியையும் இப்படத்திற்காக செய்து கொண்டேயிருக்கிறார் விஜய். 16 ந் தேதி காலை 11 மணி நிலவரப்படி சென்சார் சர்டிபிகேட், தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு சென்று சேரவில்லை. விலங்குகள் நலவாரியம் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கொடுத்தால்தான் இவர்களும் கொடுப்பார்கள். ஆனால் நடப்பதோ வேறு. இன்று காலைதான் மெர்சல் விஷயமாக விவாதிக்க கூடியிருக்கிறது விலங்குகள் நல வாரியம். பேச்சு வார்த்தை முடிவு என்னவாக இருக்குமோ?

அதுபோகட்டும்…. இந்த படத்தின் பட்ஜெட் கிட்டதட்ட 140 கோடி என்பதால், அதற்கேற்ற விலையை நிர்ணயித்திருக்கிறார்களாம். தியேட்டர்களிலிருந்து முன் பணம் வந்தால்தான் அது தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு போய் சேரும். இவர்கள் கேட்கிற பணம் அதிகப்படியாக இருப்பதால் பல தியேட்டர்கள் மெர்சல் விஷயத்தில் அமைதி காக்கின்றன. முன் பணம் கொடுப்பது கூட இவர்களுக்கு பிரச்சனையில்லை. அதை மீண்டும் எடுக்க வேண்டும் என்றால், அரசு நிர்ணயித்த விலையை தாண்டி டிக்கெட் விற்றால்தான் முடியும்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் கெடுபிடி, விலை குறித்த விஜய் ரசிகர்களின் அதிருப்தி, அரசாங்கத்தின் கண் கொத்தி கண்காணிப்பு… இவற்றையெல்லாம் தாண்டி விற்றால்தான் முடியும். எதற்கு ரிஸ்க் என்று நினைத்திருக்கலாம். தமிழகம் முழுக்க விஜய் படங்களை திரையிட ஆர்வம் காட்டி வந்த பல தியேட்டர்கள் பின் வாங்கிவிட்டன.

முக்கியமாக விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும்போதெல்லாம், போக்குவரத்தையே திகிலுக்கு ஆளாக்கிய காசி தியேட்டர் இந்த முறை பின் வாங்கியதுதான் பெரும் சோகம்.

விஜய்க்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ?

Leave A Reply

Your email address will not be published.