மொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்? ஆர்ஜே.பாலாஜி கேள்வி!

0

‘நடுவீட்ல குத்துவிளக்கு, நாலா பக்கமும் டேபிள் பேன்’ என்பது போல காற்றில் சிக்கி கண்டபடி தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. தொழிலாளர் கூலி என்று முதுகின் மேல் ஏற்றியதை இப்போது தலைக்கு மேல் ஏற்றி சினிமாவை தலைகுப்புற தள்ளிக் கொண்டிருக்கிறது பெப்சி. ஹீரோக்களின் சம்பளத்திலேயே பாதி உசுரை விட்டுவிடும் தயாரிப்பாளர்கள் மிச்ச சொச்ச உயிரை இந்த பாழாப்போன பணம் பிடுங்கிகளிடம் கொடுத்துவிட்டு போராடுவது இன்று நேற்று அல்ல. பதினைஞ்சு வருஷ பரிதாபம்.

இந்த விஷயத்தைதான் நேற்று போகிற போக்கில் சொல்லிவிட்டு, சினிமா சிஸ்டம் சரியில்ல. அதை மாத்துலேன்னா கஷ்டம் என்று கூறினார் ஆர்ஜே.பாலாஜி. இவர் நடித்த இவன் தந்திரன் மறு ரிலீஸ் ஆகியிருக்கிறது இன்று. அது குறித்து பேச வந்த பாலாஜி, “நான் ஒண்ணும் பெரிய நடிகன் இல்லே. ஆனால் இங்கு நடிக்க வந்த பின் கவனிச்ச வரைக்கும் ஒண்ணு புரியுது. இங்க எதுவுமே சரியா நடக்கல” என்றார்.

“மொட்டை ராஜேந்திரன் நடிக்கிற ஷாட் போயிட்டு இருக்கு. பக்கத்துல ஒரு ஹேர் டிரஸ்சர் இருக்காங்க. எதுக்குங்க இவங்க என்றால், அவங்கதான் மொட்டை ராஜேந்திரனின் ஹேர் டிரஸ்சர்ங்கிறாங்க. மொட்டை தலைக்கு எதுக்கு ஹேர் டிரஸ்சர்? இப்படிதான்… ஒவ்வொரு ஹீரோயினுக்கும் சுமார் எட்டுபேர் உதவிக்கு வர்றாங்க. அவங்களுடைய சம்பளமே தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுது. இப்படி தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்” என்று கூற…

இதெல்லாம் விழ வேண்டியவங்க காதுல விழுந்தால்தானே? என்ற முணுமுணுப்போடு கலைந்தனர் அனைவரும்.

பல வருஷத்து புலம்பல். ஆனால் பாலாஜி சொல் பலிக்குமா? பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.