ஆர்.கே.நகரை அதிரவிட்ட விஷால்! மனு நிராகரிப்பும் ஏற்பும்!

1

ஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது. சேரன் அறையை காலி பண்ணிய அடுத்தடுத்த நிமிஷங்களில் பலத்த திருப்பம். விஷாலின் மனு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட…. அதுவரை படு கவலைக்கு ஆளாகியிருந்த விஷால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள்.

இப்படியொரு பிரச்சனை வர என்ன காரணம்?

சொந்த தொகுதியை இருப்பிடமாக கொண்ட பத்து பேர் கையெழுத்திட்டால்தான் அந்த மனு செல்லுபடியாகும். அப்படி கையெழுத்துப் போட்ட ஒரு பெண்மணியை மதுசூதனன் அணியினர் அழைத்து கடுமையாக மிரட்டினார்களாம். அவரும் இது என் கையெழுத்தில்லை என்று தேர்தல் அதிகாரியிடம் நேரில் சொல்ல… வந்தது வினை. விஷாலின் மனுவை தள்ளுபடி செய்தார் அதிகாரி. அதற்காக சோர்ந்து போய்விடவில்லை விஷால். சாலை மறியல் செய்தார். தேர்தல் அதிகாரியிடம் வாதாடினார். கடைசியில் எப்படியோ… அந்த பெண் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை காட்டி மீண்டும் மனுவை செல்லுபடியாக வைத்துவிட்டார்.

விஷாலெல்லாம் ஒரு ஆளா? அவரெல்லாம் ஒரு எதிரியா? என்று பேசி பேசியே அவரை முக்கியஸ்தர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை அரைகுறையாக இருந்த அவரது செல்வாக்கு, இன்று இரவு ஏழு மணி நிலவரப்படி, லேசாக மாறிக் கொண்டிருக்கிறது. (இவர்களே டெபாசிட்டை நிச்சயம் செய்து கொடுப்பார்கள் போலிருக்கிறது)

இந்த தேர்தல் முடியும் வரை விஷாலே சும்மாயிருந்தாலும், அவரை எதிர்த்து நிற்பவர்கள் சும்மாயில்லாமல் சீண்டிக் கொண்டிருந்தால், மக்கள் ‘யு டேர்ன்’ அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. நடத்துங்க பெருசுகளா…

1 Comment
  1. Vinod says

    திமிரு புடிச்ச கொழுப்பெடுத்த கருவாயன் காலி. போட்டி இல்ல.

Leave A Reply

Your email address will not be published.