சமந்தா படத்துக்கே சங்கடம்! காற்றில் பறக்கும் சங்க விதிகள்!

0

‘லூசியா’ என்ற படத்தின் மூலம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த பவன் குமார் இயக்கத்தில் வந்த படம் ‘யு டேர்ன்’. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது. ரசிகர்களை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்ப விடாமல் கட்டிப் போடுகிற அளவுக்கு கிரிஸ்ப் அண்டு விறுவிறுப்பான படம் என்கிறார்கள்.

இன்று திரைக்கு வந்திருக்கும் இந்த ‘யு டேர்ன்’ படத்திற்குதான் சீமையில இடம் இல்லை. வொய்?

பொதுவாகவே பெரிய படங்கள் வரும்போதெல்லாம் சின்னப்படங்களுக்கு ஏற்படுகிற அதோகதி பொசிஷன்தான் இந்தப்படத்திற்கும். இத்தனைக்கும் இது சின்னப்படமே இல்லை. அதுதான் பெரிய கொடுமை. சமந்தா லீட் ரோல் செய்திருக்கும் இப்படத்தை ஆந்திராவில் பெரியப்படம் என்கிறார்கள். இங்குதான் இது சின்னஞ்சிறு படமாகிவிட்டது. சரி போகட்டும்… விஷயத்தின் சாரம்சம் என்ன?

சில நாட்களுக்கு முன் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ திடீர் பிக்கப் ஆகிவிட்டது. அதனால் படத்தை மாற்ற தயங்குகிறார்களாம் தியேட்டர்காரர்கள். அதுவே சுமார் 300 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொண்டது. மீதியிருக்கும் தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்களை சிவகார்த்திகேயனின் சீமராஜா பிடித்துக் கொண்டது. இந்த நசுங்கலில் அநியாயத்துக்கு சிக்கிக் கொண்டு அல்லாடுகிறது யு டேர்ன்.

இப்படத்தை தமிழில் வெளியிடும் போஃப்டா தனஞ்செயன், கதறி ஒரு ட்விட் செய்திருக்கிறார்.

‘ரஜினி படமா இருந்தால் கூட 300 தியேட்டர்களுக்கு மேல் கிடையாது’ என்று வாய்கிழிய பேசிய விஷால், கடந்த சில மாதங்களாகவே நாட் ரீச்சபுள் பொசிஷனில் இருப்பதால், இவரது கூக்குரல் கேட்டிருக்குமா என்பதும் டவுட்டுதான்.

வரவர சங்கம் வாய்ப் பேச்சுக்குதான் லாயக்கு என்பது போலாகிவிட்டது. ஆனால் போட்டிக்கும் பேட்டிக்கும் மட்டும் குறைச்சல் இல்ல!

Leave A Reply

Your email address will not be published.