மோடி வரவேற்பு கூட்டத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி!

0

தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும் காரணம் படத்தில் இடம் பெற்ற அந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள்தான்.

விஜய்யின் வாயால் அது வெளிப்பட்ட பின்பு இன்னும் வீரியமாக… அதானே? அவர் சொல்றதுல என்னய்யா தப்பு? என்று அடித்தொண்டையால் ஆர்ப்பரித்தது தமிழ்நாடு. இந்த விவகாரம் தொடர்பாக தந்தி டி.விக்கு பேட்டியளித்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி மாட்டையும் கட்டக் கூடாது. பயிரையும் காப்பாத்தணும் ரேஞ்சிலேயே பேசி வர… நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அடித்த கமெண்ட் அவ்வளவு காது கொடுக்கிற ரகத்தில் இல்லை.

இப்படி மோடியை வச்சு செய்த விஜய், சில தினங்களுக்குள்ளேயே இப்படியொரு போட்டோ தன் கண்களால் காண நேரும் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார். நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, தான் உரை நிகழ்த்தும் மண்டபத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நடிகர் பிரசாந்த் ஆகியோர் போட்டோ வளையத்திற்குள் விழுந்தார்கள். உற்று கவனித்தால் இவர்களுக்கு பின்னால், தன் முக வசீகர சிரிப்போடு நின்று கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி.

நாடு முழுக்க கேட்கிற மாதிரி நையாண்டி பண்ணினாலும் பிரதமர் வந்தால், பிதாமகனே என்று வணங்குவதுதானே சாஸ்திரம். நல்லா பண்றீங்க எஸ்.ஏ.சி!

Leave A Reply

Your email address will not be published.