ஓடு ஓடு நிக்காம ஓடு! விஷாலை மிரட்டிய சமந்தா?

0

நாமக்கட்டிக்கும் நகவெட்டிக்கும் வித்தியாசம் தெரியலேன்னா என்னய்யா கண்ணு அது? இப்படி விஷாலை நோக்கி மட்டுமல்ல… தமிழ்சினிமா இன்டஸ்ட்ரியையே நோக்கி கேள்வி கேட்க வேண்டிய நேரம்தான் இது. பொதுவாகவே ஒரு நடிகையை பற்றி காதல் கிசுகிசு கிளம்புகிறதென்றால், அதை ஐஎஸ்ஐ தரத்தோடு உறுதிபடுத்திக் கொண்டுதான் அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பார்கள் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் படம் பாதியில் நடந்து கொண்டிருக்கும் போதே, அப்படத்தின் ஹீரோயின் மாலையும் கழுத்துமாக வந்து நின்றால், அந்த மாலையை கழற்றி தயாரிப்பாளர் கழுத்தில் போட்டு கிடாவெட்டு நடக்கும் பலி பீடத்திற்கு அனுப்பிவிட வேண்டியதுதான். மேற்படி படத்தை ஒரு விநியோகஸ்தரும் வாங்க மாட்டார். ரசிகர்களும், கல்யாணம் ஆன ஹீரோயின்களை ரசிப்பதேயில்லை.

சமந்தாவும் நாகசைதன்யாவும் காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரிந்தும் அவரை தானே தயாரித்து நடிக்கும் இரும்புத் திரை படத்தில் நடிக்க அழைத்தார் விஷால். அதன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு நாள் விஷாலை அழைத்த சமந்தா, “ஏப்ரலுக்கு பிறகு ஒரு நாள் கூட கால்ஷீட் தர மாட்டேன். என் போர்ஷனை முடிச்சு அனுப்பிடுங்க. ஏன்னா எனக்கு ஏப்ரல்ல கல்யாணம். ஒரு நிமிஷம் கூட நிற்காம ஓடினால்தான் இது சாத்தியம்” என்று கூறிவிட்டார்.

மிஸ்கின் இயக்கி வரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தனது கால்ஷீட்டை அவருக்கு கொடுப்பதா? சமந்தாவின் அர்ஜன்ட்டுக்காக இரும்புத்திரைக்கு கொடுப்பதா? தலை கிர்ரான விஷால், இரண்டு படங்களிலும் ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார். அடப்பாவமே… இந்த லட்சணத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் மூக்கை நுழைப்பதால் படு பயங்கர நேர நெருக்கடியில் இருக்கிறாராம்.

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு எந்த ரசிகன் கேட்கிறான்?

Leave A Reply

Your email address will not be published.