அட்லீயால் கெட்ட சங்கமித்ரா! ஸ்ருதிஹாசன் சாபம் சும்மாவிடாது?

1

தென்னை மரத்தை உலுக்குனா பலா மரம் கொட்டுமா? கொட்டுதேய்யா… கொட்டுதே!

அண்மைக்காலமாக சங்கமித்ரா பேச்சாகவே இருக்கிறது சினிமா செய்திகளில். கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜை போடப் பட்டதிலிருந்து, ஸ்ருதிஹாசன் அப்படத்திலிருந்து விலகியது வரைக்கும் ஒரே பரபரப்புதான்! சுமார் 300 கோடி செலவில் ஆர்யா, ஜெயம்ரவியை வைத்து எடுத்தால், போட்ட பணத்தை எடுக்க முடியுமா? என்கிற கேள்வியை தியேட்டரில் முறுக்கு விற்கும் சின்னப்பையன் கூட எழுப்புகிற அளவுக்கு போனது அப்படத்தின் கால்குலேஷன் கணக்கு வழக்குகள்.

இருந்தாலும் தன்னம்பிக்கையோடு கிளம்பிய படக்குழுவினருக்கு விஜய் அட்லீ இணையும் படத்தால்தான் பிரச்சனையே! என்னய்யா சொல்றீங்க?

யெஸ்… சுமார் 130 கோடியை இதுவரைக்கும் விழுங்கியிருக்கிறதாம் இப்படம். முதலில் போட்ட பட்ஜெட்டுக்கும், இதுவரை ஆன எக்ஸ்ட்ரா செலவுக்கும் நடுவே இருக்கும் வித்தியாசம் பல கோடிகள் என்கிறது தகவல்கள். இந்த எக்ஸ்ட்ரா பணம் முழுக்க, சங்கமித்ராவுக்காக வைத்திருந்த பணமாம். தேனான்டாள் நிறுவனம், வேறு வழியில்லாமல் அவற்றை எடுத்து விஜய் படத்தில் கொட்டியிருக்கிறது. அட்லீயின் கை தாராளம்தான் இந்த எக்ஸ்ட்ரா பில்லுக்கு காரணம்.

திட்டமிட்டபடி படம் நகராததால்தான் ஸ்ருதியே சங்கமித்ராவிலிருந்து விலகினாராம். ஆக கூட்டிக் கழிச்சு பாருங்க… தென்னை மரத்தை உலுக்கி, பலா மரத்தை கொட்ட வைத்தவர் அட்லீ என்பது புரியும்.

1 Comment
  1. ragu says

    two films he copied as karipalty director. now producer? where the money comes from?

Leave A Reply

Your email address will not be published.