பாகுபலி மீது படு கோபத்தில் சங்கிலி புங்கிலி!

1

‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படம் ஹிட்! வசூல் இவ்வளவு என்று பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ட்விட் பண்ணிவிட்டது. அது சொல்கிற கணக்குப்படி பார்த்தால், முதல் மூன்று நாள் வசூல் கிட்டதட்ட ஆறு கோடி. ஜீவாவின் தரைமட்ட மார்க்கெட்டுக்கு இது அதிகம்தான் என்றாலும், இதுவரைக்கும் கிடைத்ததே பேரின்பம் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறது கம்பெனி. அதை தொடர்ந்து நேற்று படத்தின் சக்சஸ் மீட்!

‘முன்னால இருக்கிறவனெல்லாம் முட்டா தொக்கு’ என்ற எண்ணத்திலேயே பேசிக் கொண்டிருந்தார் சூரி. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த கதையைதான் அப்படி விவரித்தார். சீன் படி இவரை நாய் துரத்த வேண்டும். பயிற்சி தரப்பட்ட நாய்கள் இரண்டை வரவழைத்துவிட்டார்கள். சூரி ஓட, பின்னாலே அது துரத்தி வருகிற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. திரும்பி பார்த்தால், மேற்படி ட்ரெய்னிங் நாயோடு மேலும் சில தெருநாய்கள் சூழ்ந்து கொண்டதாம். உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடியதாக குறிப்பிட்டார். என்னதான் கற்பனை என்றாலும், தினந்தோறும் ஷுட்டிங் ஸ்பாட்டுகளையும், அதன் சூழ்நிலை தெளிவுகளையும் பார்த்து பழகிய பத்திரிகையாளர்கள் முன்பு இப்படி சொன்னால் என்னாகும்? பொங்கி வந்த எரிச்சலை அடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார்கள் பலரும்.

சரி போகட்டும்… படத்தின் இயக்குனர் அய்க் பேச்சில் அவரை அறியாமல் ஒரு உண்மை வந்தது. “அப்பப்ப வயிறு கலங்கும். படம் ரிலீஸ் அன்னைக்கு ரொம்பவே மிரண்டு போயிருந்தேன். ஆனால் பலரும் போன் பண்ணி, டிக்கெட் கிடைக்கல. கொஞ்சம் வாங்கிக் கொடுங்களேன்னு கேட்கும்போதுதான் உயிரே வந்திச்சு. ஒரு நேரடி தமிழ் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி” என்றார்.

டப்பிங் படமான பாகுபலிக்குதான் நாட்ல மரியாதை. மற்றதெல்லாம் அதுக்கு பின்னாடிதான் என்பதை இவ்வளவு நாசுக்காக யாரால் சொல்ல முடியும்? உங்க ஆதங்கத்தை பட்டவர்த்தனமா போட்டு உடைச்சதுக்காகவே ஒரு பாராட்டு… புடியுங்கோ… அய்க்!

1 Comment
  1. Senthil says

    பாகுபாலியோட ஒப்பிடும் போது சங்கிலி புங்கிலி கதவை தோற ஒரு குப்பை படம். இதில வேற இவனுங்க வெற்றிவிழா, பொறாமை, போங்கடா. நல்ல தமிழ் படம் எடுங்கடா, அப்புறம் டப்பிங் படம் பாத்து பொறாமை படலாம்

Leave A Reply

Your email address will not be published.