ஆளே இளைச்சுட்டேன் பாருங்க! சந்தானம் கொடுத்த ஷாக்!

0

அடியோடு மாறிவிட்டார் சந்தானம்! “படம் தயாரிக்கறதுதான் கஷ்டம். பாருங்க… நான் எவ்ளோ இளைச்சு போயிட்டேன்னு?” என்று அவர் சொல்லும்போது, சுருக்கென கவலை ஆட்கொண்டது நம்மை! சந்தானத்தையும் அவரது சிரிப்பையும் 24 மணி நேரமும் காண வேண்டும். அதுதான் நம் பிரார்த்தனையும்.

‘ஏண்டா… தூங்கும்போது கூட சிரிச்சுகிட்டே தூங்குறவன் முக்கா லூசு தெரியுமா?’ என்று கூடவே சந்தானத்தின் நக்கலும் காதில் கேட்பதால் நேரடியாக மேட்டருக்கு வருவோம். ‘தில்லுக்கு துட்டு பார்ட் 2’ ஒரு வழியாக முடிந்து ரிலீசுக்கு வந்திருக்கிறது.

லொள்ளு சபா மூலம் விஜய் டி.வியில் சந்தானத்தை அறிமுகப்படுத்திய ராம் பாலா என்பவர்தான் இப்படத்தின் இயக்குனர். வழக்கமா பேய்தான் மனுஷனை அலற விடும். அப்படியே உல்டாவா ஒரு பேயை சந்தானம் அலற விட்டா எப்படியிருக்கும்னு யோசித்திருக்கிறார் ராம்பாலா. கேட்கவே அலப்பறை வழியும் இந்த நாட், நாட்டுல நுழைஞ்சு பெரும் வசூலை ஈட்டும் என்று நம்புகிற மாதிரிதான் இருக்கிறது ட்ரெய்லர்.

கேள்வி ஏதாவது இருந்தா கேளுங்க. நான் பதில் சொல்றேன் என்றார் சந்தானம். நீங்க மறுபடியும் காமெடியனா நடிப்பீங்களா என்றது பிரஸ். நாட்டு மக்களின் ஒரே குரல் அதுதானே? பட்… ஸோ. சேட்! மாட்டேன் என்றார் சந்தானம். அதுவும் தீர்மானமாக. இப்ப வர்ற காமெடியெல்லாம் காமெடியாவே இல்ல என்கிற பிரஸ்சின் கருத்துக்கு நான் ஒண்ணும் கருத்து சொல்ல முடியாதே… என்று நழுவிய சந்தானத்தின் லட்சியம் டைரக்டர் ஆவதுதான்.

சீக்கிரம் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன் என்றார். அவரது முதல் சாய்ஸ் ஆர்யாவாக இருக்கிறது.

ஜாடி மூடிய நசுக்காம, மூடி ஜாடியா நசுக்கமா பக்குவமா நடக்கட்டும்!

டைரக்டர் சந்தானத்துக்கு ரசிகர் மன்றம் திறக்கறவங்க இப்பவே திறந்துக்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.