சந்தோஷ் நாராயணனின் அசிஸ்டென்டுக்கு அவரைவிட பேராசை!

0

சினிமாவில் எடுக்கப்படும் எல்லா கதைகளும் வெறும் கற்பனை அல்ல. அந்தந்த இயக்குனர்களின் சொந்த வாழ்வின் சம்பவங்கள்தான் அதில் அதிகம் இருக்கும். அப்படி ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு காலத்தில் காய்கறி வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்த பாலமுருகன், தன் சொந்த வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கதையாக எழுதி இயக்கிய படம்தான் தங்கரதம்! (கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வரும்ங்கிற மாதிரி கலையறிவு முற்றியதால் கோடம்பாக்கத்திற்கு வந்திருப்பாரோ?)

வெற்றி என்பவர் ஹீரோவாக நடிக்க அதிதி கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு வேன் டிரைவர் பள்ளி மாணவியை காதலிக்கிற கதை. இந்த ஹீரோயினுக்கு அண்ணனாக சுந்தரபாண்டியன், தர்மதுரை புகழ் சவுந்தர்ராஜா நடித்திருக்கிறார். (அப்ப வில்லன் இவர்தானா என்றால், அதுதான் இல்லையாம்)

ஒரு சாமானியனின் மனசு இன்னொரு சாமானியனுக்குதான் தெரியும் என்பதை போல இந்த படத்தில் ஒரு விசேஷம். இப்படத்தின் இயக்குனர் சாப்பிடுவதற்காக அடிக்கடி ஒரு ஓட்டலுக்கு போவாராம். அங்கு க்ளினர் வேலை பார்த்து வந்த தம்பி ஒருவரை அழைத்து வந்து படத்தின் மிக முக்கிய ரோலில் நடிக்க வைத்துவிட்டார். “படத்தில் எல்லாரும் பேசப்படுவார்கள். எல்லாரையும் விட, வெள்ளப்புறா என்ற கேரக்டரில் நடித்திருக்கும் இந்த தம்பி நிறைய பேசப்படுவார்” என்றார்.

அறிமுகமான முதல் படத்திலேயே இப்படத்தின் மியூசிக் டைரக்டர் டோனி பிரிட்டோவுக்கு அடித்தது லக்கி. சந்தோஷ் நாராயணனின் அசிஸ்டென்டான இவர், “சார்… எனக்கு இந்த பாடல்களை மாசிடோனியாவுலேயும், ஆஸ்திரேலியாவுலேயும் மிக்ஸ் பண்ணணும்னு ஆசை” என்று சொல்ல, எவ்வித தயக்கமும் இன்றி டிக்கெட் போட்டுக் கொடுத்துவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர் வர்கீஸ்.

எல்லா சகுனமும் நல்லாயிருக்கு. சரியான நேரத்தில் தியேட்டருக்கு வந்து, முறையான கலெக்ஷனை அள்ளிட்டு போங்க…!

பின்குறிப்பு- இப்படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் இருக்கிறது. ஒரு இளம் பெண் ஆடுகிறார். ஆனால் ஆட்டத்திலும், ஆடையிலும் அவ்வளவு டீசன்ட்! ‘டிகிரி காபி’ ரொம்ப குவாலிடியோ?

Leave A Reply

Your email address will not be published.